Wednesday, April 21, 2010

உள்குத்து கவிதைகள் - 7

கார்ப்பரேட் சாமிகள்

கருவறையில்
கரு வரையில் படமெடுத்தாலும்
கார்ப்பரேட் சாமிகள்
கர்ப்ப ரேட் கேட்டாலும்
காவியிடமே - கடவுளின்
சாவி உள்ளதென
கூவி கூடிடும் - பாவிகளே
நம்மா(ட்)க்கள்!


அகநானூறாயிரம்

அகநானூறு படைத்தவன்
படைத்திருப்பான்....
அகநானூறாயிரம் - நம்
காதலைப் பார்த்திருந்தால்...!!!


மரண அறிவிப்பு

தன் முனையில் கருமையேற்றி
தன்முனைப்பில்
தனக்குத் தானே
மரண அறிவித்தல் ...
மின்விளக்கு!




17 comments:

பிரபாகர் said...

ரொம்ப நல்லாருக்கு ரோஸ்விக்... கார்ப்பரேட் - கர்ப்பரேட்... அகநானூராயிரம், முனைக்கருமை... நல்லாத்தான் யோசிச்சிருக்கீரு...

பிரபாகர்...

'பரிவை' சே.குமார் said...

ரொம்ப நல்லாருக்கு ரோஸ்விக்.

பனித்துளி சங்கர் said...

மிகவும் அருமை . நல்லா எழுதி இருக்கிறீர்கள் . பகிர்வுக்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லாருக்கு ரோஸ்விக்

Chitra said...

வார்த்தைகள் எடுத்து நல்லா விளையாடி, கவிதைகள் வந்திருக்குங்க. அருமை.

நாடோடி said...

க‌விதைக‌ள் ந‌ல்லா இருக்கு....... முத‌ல் க‌விதை ஸ்பெச‌ல்

vasu balaji said...

நல்லாவே குத்துது எல்லாம். :)

MUTHU said...

அருமையான வார்த்தை நடைகள்

ஹேமா said...

ஆழச் சிந்தித்த கவிதை வரிகள்.

பித்தனின் வாக்கு said...

good rosewick

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

தன் முனையில் கருமையேற்றி
தன்முனைப்பில்
தனக்குத் தானே
மரண அறிவித்தல் ...
மின்விளக்கு!
//

ஏம்பா .. உடம்பு சரியில்லையா?
:-)

டமாசு..ஹி..ஹி

"உழவன்" "Uzhavan" said...

//நம்மா(ட்)க்கள்!//
 
அருமை

சத்ரியன் said...

ரோஸ்விக்,

மொத கவித வெளியவே குத்துதே சாமி.

Ahamed irshad said...

அருமையான கவிதை வரிகள்....

மங்குனி அமைச்சர் said...

ரோஸு எல்லாமே , சூபரா இருக்கு

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

வாவ்.. நடத்துங்க... வாழ்த்துக்கள்

ரோஸ்விக் said...

பிரபாகர்
சே.குமார்
♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫
T.V.ராதாகிருஷ்ணன்
Chitra
நாடோடி
வானம்பாடிகள்
Muthu
ஹேமா
பித்தனின் வாக்கு
பட்டாபட்டி..
"உழவன்" "Uzhavan"
’மனவிழி’சத்ரியன்
அஹமது இர்ஷாத்
அப்பாவி தங்கமணி

- மிக்க நன்றி அன்பு உள்ளங்களே...