கிராமத்துல பொறந்து, அங்கையே படிச்சு வளந்த வாழ்க்கைய நெனச்சுப் பாத்தா... அந்த ஊரு வயக்காடுக மாதிரி ரொம்ப பசுமையாத் தான் இருக்கு.
பயலுக்கு நாலு வயசாச்சு, அவனைக் கொண்டுபோய் பால்வாடியில சேத்துவிட்டா அவம் பாட்டுக்க போயி, அங்க போடுற சோத்த தின்னுப்புட்டு, அங்க வர்ற புள்ளகுட்டிகளோட வெளையாண்டுட்டு, அங்கிட்டே சத்த தூங்கிட்டு சாயந்தரமா வருவான். அதுக பாட்டுக்க இப்புடி தெனோம் போயிட்டு வந்தா, நம்ம காடு கரைக்கு போகலாம், வீட்டு வேலைகளைப் பாக்கலாம். இந்த வருஷம் பால்வாடி ஆயா பாப்பா அக்காகிட்ட சொல்லி தெனமும் இவனையும் கூட்டிகிட்டு போக சொல்லணும்.
தம்பி இன்னையிலருந்து நீ, பட்டவரு பேரன் ராபட்டு, பரிபூரணம் பேரன் ஜோசப்பு கூட தெனமும் பால்வாடிக்கு போகணும். தெனமும் காலையில பாப்பாக்கா வந்து உங்கள கூட்டிகிட்டு போவாக. போகும்போது ரோட்டு ஓரமா போகணும். பஸ்சுகிஸ்சு வரும். பாத்து போகணும். அங்க போயி யாருகூடயும் சண்டைபோடாம வெளையாண்டுட்டு, சாப்புட்டுட்டு சாயந்தரம் எல்லாரோடவும் சேந்து வீட்டுக்கு வந்துரு. சரியா?
இது மாதிரி தெனமும் நாங்க கொஞ்சப்பேரு பால்வாடிக்கி போய்ட்டு வந்துக்கிட்டு இருந்தோம். தூக்கிகிட்டு போறதுக்கு எந்த புத்தகமும், பைக்கட்டும் கிடையாது. நடந்து போகும்போதே, ரோட்டோரம் போற ஓந்திய (ஓணான்) கல்லைவிட்டு எறிஞ்சு வெளையாண்டுக்கிட்டு போறது வழக்கம். ஒவ்வொருத்தனுக்கும் ஒரு பழக்கம் இருக்கும். ஒருத்தன் லூசா இருக்குற டவுசர ஒரு கையாள புடிச்சுகிட்டும், இன்னொருத்தன் ஒழுகி முட்டை விடுற மூக்கை அப்பப்ப உறிஞ்சிகிட்டும், சட்டை காலரை வாயில வச்சு கடிச்சு உறிஞ்சிகிட்டும் போவானுக.
அங்க பால்வாடி டீச்சரு, தெனுமும் வகை வகையா "அம்மா இங்கே வா வா..., தோசையம்மா தோசை, அம்மா சுட்ட தோசை....," போன்ற பாட்டுகளச் சொல்லிக்குடுப்பாங்க. வெளையாடுரதுக்கு பொம்மையோ, விளையாட்டு சாமான்களோ, பிளே க்ரௌண்டோ எதுவும் இருக்காது. ஒரே ஒரு நீண்ட ஹால் தான் எங்க பால்வாடி. வீதியோரம் விறகடுப்ப பத்த வச்சு எல்லாப் புள்ளைகளுக்கும் ஒண்ணாப் போட்ட சோறு (காய்கறி, கொழம்பு, சோறுன்னு தனித்தனியா இல்லாம) பாப்பா அக்கா சமைக்க ஆரம்பிச்சுருவாங்க.
அதே வீதில கொட்டாச்சில (தேங்காய் ஓடு) மண் அள்ளி விளையாடுறது தான் எங்க பொழுதுபோக்கு. அப்புடியே அங்க சாப்புட்டுப்புட்டு, அந்த ஹால்ல படுத்து தூங்க சொல்லுவாங்க... நாலு மணிக்கு எழுப்பிவிட்டு வீட்டுக்கு அனுப்பி விடுவாக. இப்புடியே ரெண்டு வருஷம் ஓடும்.
ஏங்க இவனுக்கு இந்த வருசத்தோட அஞ்சு வயசு முடியுது. வர்ற ஜூன் மாசம் இவன பெரிய பள்ளியோடத்துல பேரு சேக்கனும். நீங்க ஹெட்மாஸ்டரையும், ஒண்ணாங்கிளாஸ் அம்மாங்களையும்(கிறிஸ்டியன் சிஷ்டர்களை அம்மாங்க-ன்னும் கிராமத்துல சொல்லுவாங்க) பார்த்தா சொல்லி வையுங்க.
சரிடி சொல்லிருவோம். அடுத்த வருசமும் இந்த சளி முழுங்கி(காறி உமிழும்போது சளி வந்தா முழுங்குற பழக்கம் இவங்களுக்கு) அம்மாங்க தான் ஒண்ணாங்கிளாஸ் டீச்சரா??
அமாங்க, இன்னும் மூணு வருசத்துக்கு இவுகளுக்கு ட்ரான்ஸ்ஃபர் இல்லையாம். நீங்க வேலைக்கு போய்ட்டு வரும்போது இவனுக்கு ஒரு பிளாஸ்டிக் சிலேட்டும், ஒரு சப்பட்டைகுச்சி பாக்கெட்டும், ஒரு உருண்டைகுச்சி பாக்கெட்டும், இதையெல்லாம் கொண்டுபோக ஒரு பையும் வாங்கிட்டு வாங்க. ம்ம்ம்... நரம்புப் பைய்யா வாங்கிக்கங்க. அதுதான் தாங்கும்.
சரி சரி வாங்கிட்டு வாரேன். ஆமா, பள்ளியோடத்துல சேக்கும்போது எல்லாருக்கும் முட்டாயி குடுக்கணுமே அதுவும் வாங்க வேணாம்??
அதை இப்பவே வாங்க வேணாங்க. இன்னும் பள்ளியோடந்தொறக்க ரெண்டு வாரம் கெடக்கு. முட்டாயி பாக்கெட்டு மட்டும் நம்ம சத்துனாரு கடையில வாங்கிக்கலாம். அது சும்மா அஞ்சு பைசா புளிப்பு முட்டாயி வாங்கிக்கலாம்.
இந்த வருஷம் என்னைய பெரிய பள்ளியோடத்துல பேரு சேக்கப் போறாங்களே! ஊர் பூராம் தம்பட்டம். சேரும்போதே அனைத்து படிப்புகளையும் முடித்துவிட்டது போல பெருமை. ரெண்டு வாரம் கழித்து அந்த நாளும் வந்தது.
இன்னைக்கு பொதன்கிழமை... நல்ல நாளு. இருங்க இவனை குளிப்பாட்டி பொறப்பட வைக்கிறேன். ரெண்டு பேருஞ்சேந்து போயி இவனை சேத்துவிட்டுட்டு வருவோம்.
சிஸ்டர்... இவன் எங்க மூத்தவன். இவனை இன்னைக்கு பள்ளியோடத்துல பேரு எழுதீரலாம்னு இருக்கோம்.
ரொம்ப நல்லதும்மா. இப்ப இவனுக்கு வயசு என்ன??
வர்ற ஜூலையில அஞ்சு முடிஞ்சு ஆறாகுது.
இப்ப என்ன ஜூன் மாசந்தானே ஆகுது. அஞ்சு வயசு முடிஞ்சாத்தாநேம்மா இங்க சேக்க முடியும்.
இல்ல சிஸ்டர்... இந்த ஒரு மாசத்துக்காகப் பாத்தம்னா ஒரு வருஷம் லேட் ஆயிடும்.
எங்க இவன் வலது கைய தலைக்கு மேல கொண்டுவந்து இடது காதை தொட சொல்லுங்க...
தம்பி சிஸ்டர் சொன்னது மாதிரி தொடு. எங்க இன்னும் கொஞ்சம் எட்டி தொடு... ம்ம்ம்... அப்புடித்தான். அய் நடுவிரலு காதை தொட்டுருச்சு டா. சிஸ்டர் இந்தா தொட்டிருச்சு.
ம்ம்ம்... வாடா உம் பேரு என்ன? ஒழுங்கா படிப்பியா?? வாத்தியார் மயன் மக்குன்னு இருந்துறமாட்டியே... ஒழுங்காப் படிக்கணும் என்ன??
சரி சிஸ்டர்.
வாங்க ஹெட்மாஸ்டர்கிட்ட நான் சொல்லுறேன். சார்... இந்த பையனையும் பேர் சேத்துக்கலாம். இவனுக்கும் அஞ்சு வயசு முடியுது.
(இப்பவெல்லாம் இவ்வளவு எளிதா, மலிவா பள்ளியில் சேர்க்க முடியுமா?? இரண்டரை வயது பிள்ளைகளுக்கே பள்ளிகட்டணம் கட்ட கடன் வாங்கவேண்டிய நிலமையில இருக்கு நம்ம கல்வி அமைப்புகள்... பேஷ் பேஷ்...)

45 comments:
என்னோட விசயத்தில் என்ன காமெடின்னா, என் பிறந்த தேதி மற்றும் வருடம் மாறிவிட்டது,
ஒரிஜினல் 09.04.1972 மாறியது 16.04.1970
நீங்க வேற.. நான் இன்னும் பொறக்கவேயில்லைனு சொல்றாங்க..
இங்கே ( இங்கேநா எங்கே கேட்கபடாது ) 2006 Jan 10 இல் பிறந்திருந்தாலும் 2010 Jan இல் K1 சேர்த்து கொள்ள மாட்டார்கள் ஏன் என்றல் 3 வயது முடிந்திருக்க வேண்டுமாம்...
ஆஹா!
சின்ன பிராயத்து நினைவுகள அழகா சொல்லியிருக்கீங்க! சொன்னா எல்லாமே நமக்கும் நடந்திருக்கு, இன்னும் கொஞ்சம் கூடுதலான விஷயங்களோடு...
நல்ல பகிர்வு தம்பி!
பிரபாகர்...
இரண்டரை வயது பிள்ளைகளுக்கே பள்ளிகட்டணம் கட்ட கடன் வாங்கவேண்டிய நிலமையில இருக்கு நம்ம கல்வி அமைப்புகள்... பேஷ் பேஷ்...)
......வியாபாரத்துக்கும் சேவைக்கும் வித்தியாசம் இருக்குது என்று புரிய வைக்கிறாங்க....
அவ்வளோ பெரிய விஷயத்தை இருவது வரில சொல்லிட்டியே ரோஸ்விக்கு...கலக்கிட்ட போ!
:)
பழைய பள்ளி நினைவுகள் நல்லா இருக்கு....
கிராமத்து வாசனையுடன்...அழகான் ஆரம்ப பள்ளி கதை . அழகாய் இருக்கிறது
நல்ல அழகான நினைவலைகள் ரோஸ்விக்.
உங்க தாத்தா சொன்ன அவரோட கதைதானே !
இந்த அனுபவம்லாம் எங்க இப்போ? .காசு கொடுத்து சிறைக்குள்ளே இல்ல அடைக்கறாங்க இப்போ .பாவம் குழந்தைகள் .
அழகா சொல்லிருகீங்க ரோஸ்விக்
நல்ல பகிர்வு! இன்றைக்கு இருக்கிற நிலையைப் பற்றிய ஒரு நியாயமான கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. நிஜம்!
கல்வி எப்ப வியாபாரமா பார்க்கபட்டதோ அப்பவே எல்லாம் மாறிடுச்சி. :-((
அப்படியே நம் மண்வாசனை-எழுத்தில் மகனே...
original slang!
verygood!keep going..
கிராமத்து வாசனையுடன்...அழகான ஆரம்ப பள்ளி கதை . அழகாய் இருக்கிறது
உண்மையை இப்படி நிதர்சனமாக எழுதியதற்கு நன்றி
இது என்னோட கதைதான் ஹேமா... :-)))
நன்றி.
நன்றி சித்தப்பு. :-)
தல நானும் பால்வாடிப் போய் அப்பறம் காதைத் தொட்டு எங்க ஊர் அம்மாங்கப் பள்ளிக் கூடத்துலத்தான் அஞ்சாப்பு வரையிலப் படிச்சேன்....
பதிவு நன்றாக உள்ளது.கிராமத்து வாசனையுடன் அற்புதமாக உள்ளது.
அழகான நினைவலைகள் ரோஸ்விக்.
இரண்டரை வயது பிள்ளைகளுக்கே பள்ளிகட்டணம் கட்ட கடன் வாங்கவேண்டிய நிலமையில இருக்கு நம்ம கல்வி அமைப்புகள்...//
நம்மூருலதாண்ணே, கவருமெண்டு தனியார் தொறயில கல்விய ஒப்படச்சுபுட்டு, சாராயத்த எடுத்து நடத்துதுண்ணே...
கூரமேல சோறு போட்டா ஆயிரங்காக்கா.... நாம என்னண்ணே பண்றது..... :(
அழகான பதிவு... இன்னிக்கி காதை மூக்கை எல்லாம் தொட வேண்டாம்... அப்பா purse கனமா இருந்தா போதுங்க...
நல்ல பகிர்வு..
நன்றி..
நன்றி தம்பி.
நன்றி அப்பாவி! தங்கமணி....
ரோஸ்விக்....பதிவு சூப்பரோ சூப்பரு!! எதோ உங்க கூட ஒரு முறை பள்ளிக்கூடத்துக்கு போய் படிச்சிட்டு வந்த ஒரு உணர்வை ஏற்படுத்திட்டுது உங்க எழுத்து நடை.கலக்கிட்டீங்க!
இதே நடையில, மண்மனம் வீசுற மாதிரி இன்னும் நிறைய எழுதுங்க ரோஸ்விக்!
உங்கள பதின்ம வயதுக் குறிப்புகள் எழுத அழைச்சிருக்கேன். கொஞ்சம் எழுதிடுங்களேன். நன்றி!
அன்புடன்,
பத்மஹரி.
http://padmahari.wordpress.com
Post a Comment