Saturday, April 10, 2010

சுவாரஸ்யங்கள் - ஜப்பான்

70% மலைகளாலும், குன்றுகளாலும் ஆனது. அவற்றில் 200 எரிமலைகள். 6000-க்கும் மேற்பட்ட தீவுகளை உள்ளடக்கியது.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
Fuji எனும் உயர்ந்த மலையில் உள்ள எரிமலை இன்றும் தீக்குழம்புகளைக் கக்கிக்கொண்டிருக்கிறது.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
குதிரையின் பச்சைக்கறி அவர்களின் பாப்புலரான உணவுகளில் ஒன்று.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
ஜப்பானியர்கள் அதிக அளவில் காஃபி அருந்துபவர்கள்.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
ஜப்பானிய மொழி நான்கு வகையான் எழுத்து முறைகளைக் கொண்டது.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
ஜப்பானியர்கள் 100% எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள்.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
பெரும்பாலான கழிப்பறைகளில் பின்புறமாக நீர் தெளிக்கும் வகையில் built-in Spray system இருக்கும்.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
ஒரு வாடகை வீட்டில் குடியேறும்போது, அந்த வீட்டு முதலாளிக்கு இரண்டு மாத வாடகைப் பணம் பரிசுத்தொகையாக வழங்கப்பட வேண்டும்.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
ஒவ்வொரு வருடமும் ஜப்பானில் சுமார் 1500 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
அரிசி சாதம் அவர்களின் பிரதான உணவு. காலை உணவுக்கும் கூட இதையே உண்பர்.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
அதிகபட்ச சராசரி வாழ்நாளைக் கொண்டவர்கள் ஜப்பானியர்கள். அமெரிக்கர்களை விட 4 வருடங்கள் கூடுதலாக வாழக்கூடியவர்கள்.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
உலகில் அதிக அளவில் ஆட்டோமொபைல் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நாடு ஜப்பான்.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
ஜப்பான் மொழி ஆயிரக்கணக்கான வேற்றுமொழி வார்த்தைகளைக் கலந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
ஜப்பானில் உள்ள Tsukiji எனும் மீன் சந்தை மிகப்பெரியது.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
ஜப்பானியர்களில் சில ஆண்கள் மன்னிப்புக் கேட்கும் விதமாக தங்கள் தலையை மொட்டை அடித்துக் கொள்வார்கள்.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
ஜப்பானியர்களில் சில பெண்கள் தனது காதலருடனான உறவை முறிந்துக் கொண்டதன் பிறகு தங்களின் கூந்தலை நறுக்கி விடுவர்.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
ஜப்பானில் பழ வகைகள் மிகவும் விலை உயர்ந்தவை. உதாரணமாக, தர்பூசணிப் பழம்(Watermelon) 300 அமெரிக்க டாலர்கள் ஆகும்.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
காலணிகள் அணியும் ஒழுங்கு முறைகளைக் குறிக்க வீடுகளின் தரைத் தளங்கள் உயர்த்தப்பட்டிருக்கும். உதாரணமாக, 6 இன்ச்-க்கு மேல் உயர்வான இடங்களில் Shoes அணியக் கூடாது. Slippers அணிந்துகொள்ளலாம் (கட்டாயம் அணிந்திருப்பர்). 1-2 இன்ச்கள் உயர்த்தப்பட்ட Tatami mat ரூம் எனப்படும் அறைகள் பொதுவாக உணவு அருந்த பயன்படுத்தப் படுவதால் அங்கு Slippers கூட அணியக் கூடாது.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
1800 -ஆம் ஆண்டுகளின் இறுதிவரை ஒருவகையான கருப்பு நிற சாயங்களைக் கொண்டு தங்கள் பற்களின் நிறங்களை மாற்றிக்கொள்வர். வெண்மையான பற்கள் அசிங்கமானவை என்பது அவர்களின் கணிப்பு.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
பழங்காலத்தில் ஜப்பானில், சிறிய கண்கள், உருண்டையான முகம், சிறிது குண்டான உடல் போன்றவை அழகின் அம்சமாகக் கருதப்பட்டு வந்தது.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
இன்னும் சில பழமையான தொழில் நிறுவனங்களில் காலையில் வேலை தொடங்குவதற்கு முன்பு உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்கப்படுகிறது. சில நிறுவனங்களில் மாலை 6 மணிக்கு மேல் மது வழங்கப்படும்.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
ஜப்பானியர்களுக்கு ஒழுங்காகக் கார் ஓட்டத் தெரியாது.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
ஜப்பானிய மொழியில் நேரடியாக "இல்லை" (No) எனும் வார்த்தை பயன்படுத்தப்படுவது திமிரான செயலாகக் கருதப்படுகிறது. அன்பு கொண்டவர்களுடனான அந்நியோன்யத்தை பொது இடங்களில் வெளிப்படுத்துவதும் திமிரான செயலாகக் கருதப்படுகிறது.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
Junior High School வகுப்புகளில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் கிடையாது. அந்த வகுப்புகள் படிக்க வேண்டியது கட்டாயம்.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
சாலையோரங்களில் சிறுநீர் கழிப்பது ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது. ஆனால் மூக்கு சிந்துவது மறுக்கப்பட்டது. ("இங்க பொது இடத்துல ஒன்னுக்குப் போனாலும் போகலாம், ஆனா, மூக்கு மட்டும் சிந்திடப்புடாதுடே" என்று நக்கல் முறையில் சொல்லப்பட்டிருக்கலாம். எனது தவறாகப் புரிதலாக இருக்கலாம்)
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
சூரியன் பெரும்பாலான நேரங்களில் சிவந்து தெரியும். எனவே, உதிக்கும் சூரியனின் தேசம் என்று அழைக்கப்படுகிறது.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
ஜப்பானியர்கள் புதிய இறைச்சி, மீன் மற்றும் காய்கறிகளையே விரும்பி உண்ணுவர். எனவே தினமும், இவற்றை சந்தைகளில் இருந்து வாங்குவர். இதனாலேயே ஜப்பானில் மிகச் சிறிய அளவிலான Fridge மட்டுமே விற்பனையாகும்.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
ஜப்பானிய கிராமங்களில், திருமணம் மற்றும் இறந்தவர்களின் இறுதி சடங்கிற்கு எவருக்கும் அழைப்பு விடுக்கத் தேவையில்லை. அனைவரும் தாமாகவே முன்னின்று நடத்துவர்.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
ஜப்பானியப் பெண்கள் பெரும்பாலும் 4-6 இன்ச் உயர காலணிகளையே பயன்படுத்துவர்.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
ஜப்பானில் Vending machine - களின் பயன்பாடு அதிகம். இதன் மூலம், பீர், ஒயின், காண்டம், சிகரெட், பேட்டரி, மின் விளக்குகள், காமிக் புத்தகங்கள், செய்தித் தாள்கள் மற்றும் பெண்கள் பயன்படுத்திய உள்ளாடைகள் கூட வாங்கமுடியும்.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
பெரும்பாலான ஜப்பானியர்கள் இரவில் வெந்நீர்க் குளியல் செய்துகொள்வர்.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
ஜப்பானில் 24 மணி நேர ATM -கள் கிடையாது. அனைத்தும் வங்கி வேலை நாட்கள் / நேரங்களில் மட்டுமே இயங்கும்.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
உலகில் குற்றங்கள் குறைவான நாடுகளில் ஜப்பானும் ஒன்று.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
பெரும் பாலியல் தொழில் கூடமாகவும் விளங்குகிறது.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~




42 comments:

Chitra said...

உலகில் குற்றங்கள் குறைவான நாடுகளில் ஜப்பானும் ஒன்று. பெரும் பாலியல் தொழில் கூடமாகவும் விளங்குகிறது.

.......ha,ha,ha,ha,...... தாங்கள் சொல்ல வந்த கருத்து என்னவோ? ஹா,ஹா,ஹா,ஹா.....

ரோஸ்விக் said...

சுட்டியமைக்கு நன்றி சித்ரா. அது அடுத்த (வரியாக)செய்தியாக இருக்கவேண்டியது. தவறுதலாக அவ்வாறு அமைந்துவிட்டது. :-)

பத்மா said...

நல்ல தகவல்கள் .சுவாரசியம்

சைவகொத்துப்பரோட்டா said...

அடேங்கப்பா!!!
புட்டு வைத்து விட்டீர்களே, ஜப்பானை பற்றி.

கோவி.கண்ணன் said...

சிறப்பான தகவல்கள்

Anonymous said...

முதல்ல இந்த முயற்ச்சிக்கு உங்களை பாராட்டியே ஆகனும். (4 வருஷமா ஜப்பானில் இருந்தும்கூட) எனக்குத் தெரியாத பல விஷயங்கள உங்க பதிவு மூலமா தெரிஞ்சிக்கிட்டேன். நன்றி.
ஆனா, உண்மைக்குப் புறம்பான சில தகவல்களும் உங்க பதிவுல இருக்குங்கிறதுனால அதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்....

//ஜப்பானிய மொழி நான்கு வகையான் எழுத்து முறைகளைக் கொண்டது.//

தவறு. மூன்று வகை மட்டுமே (காஞ்சி,ஹீராகானா மற்றும் கத்தக்கானா)

//சாலையோரங்களில் சிறுநீர் கழிப்பது ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது. ஆனால் மூக்கு சிந்துவது மறுக்கப்பட்டது.//

இது உண்மையல்ல!

//உலகில் குற்றங்கள் குறைவான நாடுகளில் ஜப்பானும் ஒன்று. //

சந்தேகமே?! (தினந்தோரும் செய்தித்தாள்களில் பாலியல் குற்றம்,கொலை போன்றவைகளை இங்கே படிக்கிறேன்)

பகிர்வுக்கு நன்றி ரோஸ்விக்!
http://padmahari.wordpress.com

மங்குனி அமைச்சர் said...

///அதிகபட்ச சராசரி வாழ்நாளைக் கொண்டவர்கள் ஜப்பானியர்கள். அமெரிக்கர்களை விட 4 வருடங்கள் கூடுதலாக வாழக்கூடியவர்கள்.///

இத படிச்சிட்டு அமெரிக்கர்களின் சராசரி வயசு என்னான்னு கேட்போம் , அத வச்சு இனொரு பதிவு போற்றலாம்னு பாதியா ? நான் கேட்க மாட்டோமே >>>>>>>>>>>>>>>>>>


////பெரும் பாலியல் தொழில் கூடமாகவும் விளங்குகிறது./////


என்னாடா , இன்னும் இந்த மேட்டர காணும்னு பாத்தேன்

Test said...

//ஜப்பானில் 24 மணி நேர ATM -கள் கிடையாது. அனைத்தும் வங்கி வேலை நாட்கள் / நேரங்களில் மட்டுமே இயங்கும்.//

இது புதுசா இருக்கே...

hari said...

24 hours ATM available in japan

நாடோடி said...

ஜ‌ப்பான் ப‌ற்றிய‌ த‌க‌வ‌ல்க‌ள் அனைத்தும் அருமை நண்ப‌ரே...

அமுதா கிருஷ்ணா said...

புதியதாய் நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது...

ரோஸ்விக் said...

padma - நன்றி பத்மா :-)

ரோஸ்விக் said...

சைவகொத்துப்பரோட்டா - நன்றி சைவகொத்துப்பரோட்டா :-)

ரோஸ்விக் said...

கோவி.கண்ணன் - நன்றி கோவியாரே! :-)

ரோஸ்விக் said...

padmahari - நன்றி பத்மஹரி :-)

இந்த தகவல்கள் சில என் நண்பன் மூலமாகவும், இணையம் மூலமாகவும் பெறப்பட்டது தான். இவற்றில் சில மாறுபாடுகளும் இருக்கலாம். இருந்தாலும், தகவலுக்காக...

"romaji" என்ற எழுத்து முறையும் இருந்ததாகப் படித்தேன். ஒருவேளை இப்போது அந்த முறை அழிந்துவிட்டதா என முடிந்தால் உறுதி செய்யவும். நானும் தெரிந்துகொள்வேன். :-)

மூக்கு சிந்துவது அங்கு மிக அசிங்கமான காரியமாகக் கருதப்படுகிறது. ஒருவேளை, "இங்க பொது இடத்துல ஒன்னுக்குப் போனாலும் போகலாம், ஆனா, மூக்கு மட்டும் சிந்திடப்புடாதுடே" என்று நக்கல் முறையில் சொல்லப்பட்டிருக்கலாம். எனது தவறாகப் புரிதலாக இருக்கலாம்.

குற்றம் தொடர்பாக - "The crime rate in Japan is amongst the lowest in the world." ஒருவேளை இந்நிலைமை முந்தைய காலங்களில் இருந்திருக்கலாம். அல்லது தவறான புள்ளி விபரமாக இருக்கலாம். (குற்றங்கள் சில இடங்களில் பதிவு செய்யப்படாமல் இருந்தாலும் இந்த தவறு நிகழ வாய்ப்பு உண்டு)

மிக மிக நன்றி நண்பரே! இதை எழுதும்போது நீங்களும், இன்றும் ஜப்பானில் உள்ள எனது நண்பன் கௌரிஷங்கரும் தான் நினைவுக்கு வந்தீர்கள்.

என்ன தமிழ் புத்தாண்டு நிகழ்சிகளுக்கு போனீர்களா?? நடிகை மீனா, லொள்ளு சபா ஜீவா, அது இது எது - சிவகார்த்திகேயன் எல்லாரும் வந்திருந்தார்களா?? :-)

hari said...

1.hiragana
2.katakana
3.kanji

romaji enbathu english(ie a,b,c) letter than japanese people romaji endru solluvargal

ரோஸ்விக் said...

மங்குனி அமைச்சர் - அமெரிக்காகாரனுக இன்னும் நம்ம பதிவுகளைப் படிக்கல... அதுனாலையாவது கண்டிப்பா ரொம்ப நாலு உசிரோட இருப்பானுக... :-))

நன்றி மங்குனி... :-)

ரோஸ்விக் said...

Logan - எனக்குத் தெரிந்த தகவல் அது. மிக்க நன்றி லோகன். :-)

ரோஸ்விக் said...

hari - ஒருவேளை இதுவும் பழைய தகவலாக இருக்கலாம். எனது நண்பனிடமும் கேட்டு உறுதி செய்துகொள்கிறேன்.

தங்களின் தகவலுக்கு நன்றி ஹரி. :-)

ரோஸ்விக் said...

நாடோடி - மிக நன்றி ஸ்டீபன். :-)

ரோஸ்விக் said...

அமுதா கிருஷ்ணா - மிக நன்றி அமுதா. :-)

ரோஸ்விக் said...

hari - Ramoji என்பது romanise வகை தான். இது அம்மா = Amma, அப்பா = appaa என்பது போல. :-)

Japanese Rōmaji (Roman letters)
The Latin alphabet was first used in Japan in the 16th century by Portuguese missionaries, who devised a romanisation system based on Portuguese spelling. Later the Dutch introduced a romanisation system based on Dutch.

By the 20th century, there were a number of different romanisation systems in use, including the Nippon, Kunrei and Hepburn systems.

Usage
Rōmaji is the standard way of transliterating Japanese into the Latin alphabet. In everyday written Japanese, rōmaji can be used to write numbers and abbreviations. It is also used in dictionaries, text books and phrase books for foreign learners of Japanese.

When typing Japanese on computers, most people, both Japanese and non-Japanese, use rōmaji, which is converted to kanji, hiragana or katakana by the input software. It is also possible to type in hiragana or katakana if you have a Japanese keyboard, but few people are familiar with this method.

Sample text in rōmaji
Subete no ningen wa, umare nagara ni shite jiyū de ari, katsu, songen to kenri to ni tsuite byōdō de aru. Ningen wa, risei to ryōshin o sazukerareteari, tagai ni dōhō no seishin o motte kōdō shinakereba naranai.

This text in standard Japanese


Translation
All human beings are born free and equal in dignity and rights. They are endowed with reason and conscience and should act towards one another in a spirit of brotherhood.
(Article 1 of the Universal Declaration of Human Rights)

hari said...

thx a lot

க.பாலாசி said...

பயனுள்ள தகவல்களை திரட்டித்தந்துள்ளீர்கள்... நன்றி...

Anonymous said...

//மிக மிக நன்றி நண்பரே! இதை எழுதும்போது நீங்களும், இன்றும் ஜப்பானில் உள்ள எனது நண்பன் கௌரிஷங்கரும் தான் நினைவுக்கு வந்தீர்கள்.//
என்னை நினைவில் வைத்துக் கொண்டிருந்தமைக்கு மிக்க நன்றி ரோஸ்விக்! (ஆனா, வலைப்பக்கத்துக்குத்தான் இப்பெல்லாம் நீங்க வர்ரதே இல்ல....அடிக்கடி வாங்க)

//என்ன தமிழ் புத்தாண்டு நிகழ்சிகளுக்கு போனீர்களா?? நடிகை மீனா, லொள்ளு சபா ஜீவா, அது இது எது - சிவகார்த்திகேயன் எல்லாரும் வந்திருந்தார்களா?? :-)//

நமக்கு பொழப்பப் (முனைவர் பட்ட ஆய்வு) பார்க்கவே நேரமில்லீங்க. அது மட்டுமில்லாம, நமக்குப் சினிமா கும்பலுக்கும் ரொம்ப தூரம், நான் டோக்கியோ எனக்கு ரொம்ப தூரம்னு சொல்ல வந்தேன்...ஹி ஹி ஹி?!)

ரோமாஜி (Romaji) குறித்த உங்களின் விளக்கம் அருமை, ஆனால் அது கணினி பயன்பாட்டின்போது மட்டுமே. பேச்சு வழக்கில் இல்லை என்பதாலேயே நான் மூன்று என்று குறிப்பிட்டிருந்தேன்! நன்றி.
http://padmahari.wordpress.com

Paleo God said...

தகவலும் பின்னூட்டமும் அருமை. :)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஏண்ணே..ஜப்பான் போக வர டிக்கெட் வாங்கிகொடுங்கண்ணே..

உங்க எல்லா தகவலும் சரினு , பட்டா வாங்கிட்டு வாரேன்..

நம்புங்கண்ணே.. மீனாக்கா வரல.. நான் மட்டும்தான் போறேன்

ஸ்ரீராம். said...

சாலையோரங்களில் சிறுநீர் கழிப்பது ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது. ஆனால் மூக்கு சிந்துவது மறுக்கப்பட்டது//

!!!!!!!!!!

ரோஸ்விக் said...

hari - மிக்க நன்றி ஹரி. நானும் விபரமாகத் தெரிந்துகொண்டேன். :-)

ரோஸ்விக் said...

க.பாலாசி - மிக்க நன்றி பாலாசி :-)

ரோஸ்விக் said...

padmahari - மிக்க நன்றி பத்மஹரி :-) நிறைய தெரிந்துகொண்டேன்.

ரோஸ்விக் said...

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ - மிக்க நன்றி சங்கர் அண்ணே! :-)

ரோஸ்விக் said...

பட்டாபட்டி.. - டிக்கெட் எடுத்துகொடுத்தா என் காசுல போயி பட்டா-வா வாங்கிகிட்டு வருவீங்க... பட்டாப்பட்டி வாங்கத்தானே கேக்குறீங்க... ? :-))

ரோஸ்விக் said...

ஸ்ரீராம். - அதில் சிறிது ஐயம் இருந்தது. இப்போது மாற்றிவிட்டேன். மன்னிக்கவும்.

rajasurian said...

தயை கூர்ந்து ரேடியோ விட்ஜெட்-ன் ஆட்டோ ப்ளே ஆப்சனை மாற்றவும். திறந்திருக்கும் பல வெப்சைட்களில் எதில் இருந்து பாட்டு சத்தம் வருகிறது என தேடி கண்டிபிடிப்பதற்குள் மண்டை காய்ந்து விடுகிறது.

ரோஸ்விக் said...

rajasurian - அண்ணே, என்னோட தளத்துல ரொம்ப காலத்துக்கு முன்னாடியே auto play நிறுத்தப்பட்டுவிட்டது. வேற எதாவது தளங்கள்-ல இருந்து வந்திருக்கலாம் பாருங்க அண்ணே.

சும்மா சில நண்பர்கள் இதன் மூலம் பாட்டு கேக்குறாங்க அப்படிங்கிற ஒரே காரணத்திற்காக அந்த விட்ஜெட் இன்னும் இருக்கு :-)

ப.கந்தசாமி said...

நல்ல சுவாரஸ்யமான தகவல்கள்.

rajasurian said...

//rajasurian - அண்ணே, என்னோட தளத்துல ரொம்ப காலத்துக்கு முன்னாடியே auto play நிறுத்தப்பட்டுவிட்டது. வேற எதாவது தளங்கள்-ல இருந்து வந்திருக்கலாம் பாருங்க அண்ணே. //

auto play நிறுத்தப்படவில்லை. plz check

பிரபாகர் said...

ரோஸ்விக்...

இடுகை வெளியிட்டு ஆறு நாள ஆச்சின்னு தவறா இருக்கு, சரி பண்ணுங்க...

அப்புறம் ஜப்பானைப்பத்தின தகவல்கள் ஜம்முனு இருந்துச்சி!

இது மாதிரி நிறையா தாங்க...

பிரபாகர்...

priyamudanprabu said...

அடேங்கப்பா!!!

எங்க பு(ப)டிச்சீங்க??

பித்தனின் வாக்கு said...

// ஏண்ணே..ஜப்பான் போக வர டிக்கெட் வாங்கிகொடுங்கண்ணே.. //

எனக்கும் அப்படியே இரண்டு டிக்கெட் கொடுப்பா? நானும் போயி இது எல்லாம் உண்மையா பொய்யா எனத் தெரிந்து கொள்கின்றேன்.
இரண்டு டிக்கெட் எதுக்கா? அது எல்லாம் எதுக்குப்பா?

நல்ல தகவல்கள், நல்ல பதிவு.

மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

நல்ல தொகுப்பு.