Thursday, March 18, 2010

வண்ணம் பூசு

வண்ணங்களோடு - அவன்
எண்ணங்களையும் பூசி
வெறும் சுவற்றை
விளம்பரச் சுவராகவும்...
மண் சுவற்றை
வெண் சுவராகவும்...
மாற்றுவான்!

இரண்டு நிறம் கொண்டு
மூன்றாம் நிறம் உருவாக்கும்...
பிரம்மனவன்!

தொட்ட வண்ணமெல்லாம் - அவன்
உடைகளில் உரிமையாய்... - அந்த
உடை மட்டுமே - அவனின்
உடைமையாய்...

வண்ணமும் அழுக்கும்
வாஞ்சையாய்
காதல் செய்யும் - அந்த
உடை உடையானுக்கு...
அருகில் அமர
அச்சம் பல()(இ)ருக்கு...

அருவருப்பாய் இருப்பினும்
அவனே தொட்டு தடவ வேண்டும்
வண்ணத்தை இவன் சுவற்றில்....

எண்ணமெல்லாம்
வண்ணமாகக் கொண்டவனுக்கு...
வண்ணம் பூசி அழகு பார்க்க - சொந்த சுவர்
வேண்டுமென...
எண்ணுதல் தவறாகுமோ? - இது
வர்ண பேதமா? - இல்லை
கர்ணனின் குரோதமா?...

வண்ணம் பூசி
வாழ்கை நடத்தும் - அவன்
ஆசைகளுக்கும் - அவன்
ஆசையின் பாசைகளுக்கும்...
அறியாமலே வளர்ந்துவிட்ட மேனிக்கும்
ஒரே நிறம்...
வறுமையாகவும்! கருமையாகவும்!!...



57 comments:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

எப்படி அப்பு..
நல்ல கவிதை சார்..
( எனக்கே புரிஞ்சது.. அதனால்தான்..)

கலக்குங்க பாஸ்..

vasu balaji said...

//அவன்
ஆசைகளுக்கும் - அவன்
ஆசையின் பாசைகளுக்கும்...
அறியாமலே வளர்ந்துவிட்ட மேனிக்கும்
ஒரே நிறம்...
வறுமையாகவும்! கருமையாகவும்!!...//

good good. :)

ப.கந்தசாமி said...

ரொம்ப நன்னா இருக்கு. பேஷ் பேஷ்!

(எத்தனை கஷ்டப்பட்டு எழுதியிருப்பீங்க, புரியலேன்னு சொன்னா எத்தனை வருத்தப்படுவீங்க?)

சும்மா தமாசுக்குங்க. நிஜமாவே நல்லாருக்குங்க.

Chitra said...

வண்ணம் பூசி
வாழ்கை நடத்தும் - அவன்
ஆசைகளுக்கும் - அவன்
ஆசையின் பாசைகளுக்கும்...
அறியாமலே வளர்ந்துவிட்ட மேனிக்கும்
ஒரே நிறம்...
வறுமையாகவும்! கருமையாகவும்!!...

......... நல்லா எழுதி இருக்கீங்க.

எம்.எம்.அப்துல்லா said...

nallaarukku

:)

க.பாலாசி said...

//தொட்ட வண்ணமெல்லாம் - அவன்
உடைகளில் உரிமையாய்... - அந்த
உடை மட்டுமே - அவனின்
உடைமையாய்...//

என் நண்பனொருத்தந்தான் ஞாபகத்துக்கு வர்ரான்.... நல்ல கவிதைங்க ரோஸ்.....

shortfilmindia.com said...

அட கவிதையெல்லாம் கூட எழுதுவீங்களா..? நல்லாருக்கு

கேபிள் சங்கர்

மங்குனி அமைச்சர் said...

ரோஸ் , சூப்பர், அருமை , கொன்னுட்ட ....... இன்னு ரெண்டு மூணு பதிவு போடு (தக்காளி என்னா பன்றது பழகி தொலைச்சிட்டோம் ). யப்பா ரோஸு சும்மா சொன்னேன் , நல்லா எழுதி இருக்க (!!!!!!??????)

பிரபாகர் said...

தம்பி, கவிதையெல்லாம் எழுதி கலக்குறீரு! ரொம்ப அருமையா இருக்கு. அடிக்கடி எழுதுங்க!

பிரபாகர்...

பத்மா said...

எண்ணமெல்லாம்
வண்ணமாகக் கொண்டவனுக்கு...
வண்ணம் பூசி அழகு பார்க்க - சொந்த சுவர்
வேண்டுமென...
எண்ணுதல் தவறாகுமோ?

தவறே இல்லை
நல்ல கவிதை

தமிழ் உதயம் said...

வண்ணமும் அழுக்கும்
வாஞ்சையாய்
காதல் செய்யும் - அந்த
உடை உடையானுக்கு...
அருகில் அமர
அச்சம் பல()(இ)ருக்கு...




உண்மை தான். உழைப்பாளியின் அழுக்கு- உழைப்பவனுக்கே தெரியும்.

Thenammai Lakshmanan said...

இளமையில் வறுமை கொடுமை அது உங்க கவிதையில் நல்லா வெளிப்பட்டு இருக்கு ரோஸ்விக்

Menaga Sathia said...

அருமையான கவிதை!!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நல்லா இருக்குங்க உங்க எழுத்து

ரோஸ்விக் said...

பட்டாபட்டி.. - புரியிற மாதிரி எழுதனும்னு முடிவோட தான் இருக்கேன் பட்டு...

நன்றி பட்டாப்பட்டி

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு மகனே.

ரோஸ்விக் said...

வானம்பாடிகள் - ரொம்ப நன்றி பாலா அண்ணே. :-)

ரோஸ்விக் said...

Dr.P.Kandaswamy - உங்களுக்கு புரியாமா இருக்குமா...? :-)

ரொம்ப நன்றி ஐயா... :-)

ரோஸ்விக் said...

Chitra - மிக்க நன்றி சித்ரா :-)

ரோஸ்விக் said...

எம்.எம்.அப்துல்லா - நிஜமாவா அண்ணே! :-)

புடிக்கவே முடியல...

ரோஸ்விக் said...

க.பாலாசி - மிக்க நன்றி பாலாசி :-) (அந்த நண்பன் எங்கே இருக்கிறான்??)

ரோஸ்விக் said...

shortfilmindia.com - இதுவும் வரும்ணே... :-) மிக்க மகிழ்ச்சி...

ரோஸ்விக் said...

மங்குனி அமைச்சர் - தக்காளி, உம்மா பதிவ நான் அலுவலகத்துல இருந்து தான் படிக்கிறேன்... அதுனால என்னால பின்னூட்டம் போட முடியல. செட்டிங்க மாத்துயா உன் பிளாக்குல-னு வெளியூரு பதிவுல உமக்கு பின்னூட்டம் போட்டேன். இன்னும் மாத்தல

இதை பாத்துட்டு மாத்துயா...
http://thisaikaati.blogspot.com/2009/10/pinnootam.html

ரோஸ்விக் said...

பிரபாகர் - இதற்கு முன்பும் எழுதி இருக்கிறேன் அண்ணா... நீங்கள் படிக்கவில்லை போலும்... :-)

மிக்க நன்றி.

ரோஸ்விக் said...

தமிழ் உதயம் - மிக்க நன்றி தமிழ் உதயம் நண்பரே!

ரோஸ்விக் said...

thenammailakshmanan - நன்றி ஆச்சி. :-)

ரோஸ்விக் said...

Mrs.Menagasathia - மிக்க நன்றி Menagasathia :-)

ரோஸ்விக் said...

அப்பாவி தங்கமணி - மிக்க நன்றி அப்பாவி தங்கமணி :-)

ரோஸ்விக் said...

பா.ராஜாராம் - ரொம்ப நன்றி சித்தப்பு :-)
எப்புடி போகுது அங்க பொழப்பு...?

ரோஸ்விக் said...

padma - மிக்க நன்றி பத்மா :-)

Ravichandran Somu said...

//ஒரே நிறம்...
வறுமையாகவும்! கருமையாகவும்!!...
///

கவிதை அருமை தம்பி. வாழ்த்துக்கள்!

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

Jerry Eshananda said...

colourful.

Rettaival's Blog said...

ரோஸ்விக்கு... பஞ்சு போல மனசுய்யா உனக்கு! கொன்னுட்ட போ!

சைவகொத்துப்பரோட்டா said...

ஓவியம் அழகாய் வந்திருக்கிறது.

மங்குனி அமைச்சர் said...

//ரோஸ்விக் said...
மங்குனி அமைச்சர் - தக்காளி, உம்மா பதிவ நான் அலுவலகத்துல இருந்து தான் படிக்கிறேன்... அதுனால என்னால பின்னூட்டம் போட முடியல. செட்டிங்க மாத்துயா உன் பிளாக்குல-னு வெளியூரு பதிவுல உமக்கு பின்னூட்டம் போட்டேன். இன்னும் மாத்தல//

யப்பா ரோஸு மாத்திட்டேன் , ரொம்ப தேங்க்ஸ்பா

சிவாஜி சங்கர் said...

Wow.. :)

ரோஸ்விக் said...

ரவிச்சந்திரன் - ரவி அண்ணா! தாங்களும் எனது பதிவை படித்து ஊக்கப்படுத்துவதில் மிக்க மகிழ்ச்சி.

தாங்களை சந்தித்ததில் பேரானந்தம். :-)

ரோஸ்விக் said...

ஜெரி ஈசானந்தா. - மிக்க நன்றி சார்.. :-)

ரோஸ்விக் said...

ரெட்டைவால் ' ஸ் -
//கொன்னுட்ட போ! //

என்னா அர்த்தத்துலையா சொல்லுறே... ? :-)))

ரொம்ப நன்றி நண்பா.

ரோஸ்விக் said...

சைவகொத்துப்பரோட்டா - ரொம்ப நன்றி நண்பரே! :-)

ரோஸ்விக் said...

மங்குனி அமைச்சர் - ரொம்ப நன்றி மங்கு... :-)

இதோ வருகிறேன்...

ரோஸ்விக் said...

Sivaji Sankar - ரொம்ப நன்றி தம்பி. :-)

ஜெய்லானி said...

கவித வண்ணமயமா இருக்கு, அதே நேரம் எண்ணமயமாவும் இருக்கு. சூப்பர் வாத்தியாரே!!!!!!!!!

ரோஸ்விக் said...

ஜெய்லானி - நன்றி ஜெய்லானி :-)

prince said...

//இரண்டு நிறம் கொண்டு
மூன்றாம் நிறம் உருவாக்கும்...
பிரம்மனவன்!//ஆழ்ந்த கருத்துள்ள கவிதை

Jabar said...

ரொம்ப நல்ல பதிவுகள்... வாழ்த்துக்கள்

பித்தனின் வாக்கு said...

எல்லாம் நல்லாதான் இருக்கு. ஆனா கடைசி வரிகள்தான். நீங்கள் எந்த உலகத்தில் இருக்கீன்றீர்கள் என்று புரியவில்லை. இப்ப எல்லாம் வூடு பூச ஆளு கிடைப்பது இல்லை. ரொம்பக் கஷ்டம் சாமி.

Balamurugan said...

வலியைச் சொல்லும் கவிதை.

மிக அருமை.

Punnakku Moottai said...

நானெல்லாம் பழ.வள்ளியப்பா கவிதைகளைத் வேற படிபதில்லை, படித்தாலும் புரிவதில்லை.

நண்பர் ரோஸ்விக் கவிதையை படிக்கும் போது, "ச்சே நாம தமிழறிவை வளர்த்துக்கொள்ளா(ல்லா)மல் விட்டுவிட்டோமே" என்றே தோன்றுகிறது.

Balamurugan said...

நண்பரே, உங்களை ஒரு தொடர் பதிவு எழுத அழைத்திருக்கிறேன்.

http://ekanthabhoomi.blogspot.com/2010/03/blog-post_26.html

ரோஸ்விக் said...

princerajan C.T - ரொம்ப நன்றி நண்பரே!

ரோஸ்விக் said...

kanavugal - ரொம்ப நன்றி நண்பரே

ரோஸ்விக் said...

பித்தனின் வாக்கு - ஆளு கிடைக்காது அண்ணே!
அவங்களையெல்லாம் கார்பரேட் முதலாளிகள் தங்கள் வசம் வைத்துள்ளனர். முந்தைய காலம் போல் நீங்கள் அவர்களை நேரடியாக இந்த வேலைக்கு கூப்பிட முடியாது. ஏதாவது ஒரு கம்பெனியிடம் நீங்கள் காண்ராக்டாகப் பேசிக்கொள்ளவேண்டும்.

ரொம்ப நன்றி அண்ணே தங்களின் கருத்துக்கு... :-)

ரோஸ்விக் said...

பாலமுருகன் - ரொம்ப நன்றி பாலமுருகன் :-)

ரோஸ்விக் said...

Punnakku Moottai - அண்ணே! பழ.வள்ளியப்பா... எங்க ஐயாவோட கவிதைகளை சுட்டு அவரு பேரை போட்டுகிட்டாரம்... ;-)

நல்ல வேலை நீங்க தமிழறிவை வளர்த்துக்கொள்ளவில்லை... இல்லையெனில் நான் கவிதை எழுதியே உங்களைக் கொன்றிருப்பேன்... :-)) தப்புச்சீங்க.... (இவருக்கு பதில் சொல்ல ரொம்ப யோசிக்க வேண்டியதிருக்கப்பா...)

ரோஸ்விக் said...

பாலமுருகன் - நண்பரே! வீட்டுல பாட்டு கேட்க முடியலை... எப்போதும் ச்சூ ச்சூ மாரியும், English Rhymes-ம் தான் ஓடுது... கொஞ்சம் டைம் குடுங்க... படிச்சிட்டு வந்து பரீட்சை எழுதுறேன்... :-)

Unknown said...

hi rose,
i cant understand why you have written this poem, it looks un necessary of context and i think you can come up with better thoughts, so that every one might feel useful.