செல்வத்துட்ச் செல்வம் செவிச்செல்வம்...
நோயற்றவாழ்வே குறைவற்ற செல்வம்...
மழலைச் செல்வம்...
- என்றெல்லாம் நாம் செல்வங்களை பல உருவங்களில் பொதித்து வைத்திருக்கிறோம். ஒருவரை வாழ்த்தும்போதும் கூட "பதினாறு செல்வமும் பெற்று பெரு வாழ்வு வாழ்க" என வாழ்த்துவதுண்டு. எவ்வடிவில் இருந்தாலும் மனிதனின் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதவை அனைத்தும் செல்வங்களே.
நாம் விரும்பும் செல்வங்களை அறிவின் உதவியாலும், அறிவியலின் உதவியாலும் ஒரு குறிப்பிட்ட அளவு வரை அடைந்திருக்கிறோம். இதிலும் குறிப்பாக நோயற்ற வாழ்வு என்பது வழியற்ற நோவாகவே இருக்கிறது. எவ்வளவோ பொருட்செல்வம் இருந்தும் பலர், தீராத வியாதிகளால் அவதிப்படுவதை நாம் அன்றாட வாழ்வில் கண்டுவருகிறோம். இத்தகைய சூழ்நிலையில் நாம் எவ்வளவு தான் அளவுக்கு அதிகமாக பொருட்செல்வம் பெற்றிருந்தாலும், அது செல்வாக்கிலா செல்வமாகிவிடுகிறது.
பாடுபட்டு பெற்ற செல்வங்களை, முறைப்படுத்தாமல் பல சமயங்களில் அவற்றை நாம் இழந்தும் வருகிறோம். அறியாமையும், பேராசையும் கடிவாளமற்ற குதிரைகளாக திசைக்கொருபுறம் இழுத்து நாம் பெற்ற செல்வங்களை சிதைத்து, நம்மையும் சிதைக்குள் சிக்க வைத்துவிடுகிறது. உபரி செலவுகள் நம்மை ஊதாரி ஆக்கிவிடுகிறது.
நம் செல்வத்தின் நிலை (Wealth) எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? ஒவ்வொரு மாதமும், நாம் பெரும் ஊதியத்தினை வைத்து எத்தகைய வாழ்க்கைத் தரத்தில் நாம் இன்று வாழ்கிறோமோ அதே வாழ்கைத் தரத்தில், இந்த வருமானம் இல்லாமல் எத்தனை நாட்கள் / மாதங்கள் வாழ முடியுமோ அதே நமது Wealth. இத்தகைய வருமானத்தை, அதாவது ஒரு தனி மனிதன் சம்பளமாகவோ, தொழிலின் வருவாயாகவோ பெரும் பணத்தை முதல் நிலை வருமானம் (Active Income) எனலாம். இத்தகைய வருமானத்திற்கு ஒவ்வொரு தனி மனிதனின் உடல் உழைப்பு முக்கியம்.
இத்தகைய வருமானம் தொழில் நசிவாலோ, உடல் உழைப்பு தரும் நபரின் இயலாமையிலோ இழக்க நேரிடலாம். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நம் வாழ்க்கைத்தரம் குறைய, நிறைய வாய்ப்பிருக்கிறது. இதனை தவிர்க்க, நாம் இரண்டாம் நிலை வருமானத்திற்கான (Passive Income) சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து ஏற்படுத்த வேண்டும். இந்த வருமானம் நமது உடல் உழைப்பின்றி வருவதாகும். நம் பரம்பரை வசதிகளை வைத்தோ, நாம் முன்னர் ஈட்டிய பொருளாதரத்தை வைத்தோ இதை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். கட்டிடங்களின் மூலம், வாகனங்களின் மூலம் வாடகையாகவோ அல்லது எவ்வித உடல் உழைப்பும் இன்றி மேற்பார்வையின் மூலமே ஒரு வருமானம் வர வேண்டும். நம்மில் எத்தனை பேர் இத்தகைய வருமானத்திற்கு வழி வகை செய்துள்ளோம்??
ஒருவேளை சிறிது தேவைக்கு அதிகமாக வருமானம் நமக்கு வரப் பெற்றிருந்தால், நாம் என்ன செய்கிறோம்? விலை உயர்ந்த வாகனம், சொகுசான வீடு அதுவும் நகரின் மையப்பகுதியில் அல்லது இன்னும் பல ஆடம்பர செலவுகள். வாழ்கையை அனுபவிக்க வேண்டும் தான் அனால், ஒட்டு மொத்த குடும்பமும் ஒரே வருவாயை நம்பி இராமல், இரண்டாம் நிலை வருமானத்திற்கும் வழி செய்தால் நம் குடும்பத்திற்கு பொருளாதார பாதுகாப்பை ஏற்படுத்தலாம்.
வேலை வாய்ப்பு உறுதியின்மை நிலவும் இந்த காலக்கட்டத்தில் நாம் முதல் நிலை வருமானத்தை கொண்டு இரண்டாம் நிலை வருமானத்திற்கு வழிவகை செய்தல் பாதுகாப்பானது. நமது சேமிப்பை பகுதிகளாகப் பிரித்து முதலீடு செய்யலாம். உதாரணமாக, 4 லட்சத்திற்கு ஒரு இடம் வாங்குவதற்கு பதிலாக 2 லட்சத்திற்கு 2 இடங்களாக வாங்கி போட்டால், எதிர்காலத்தில் தொழில் செய்ய பணம் தேவைப்படும் பொது ஒன்றை மட்டும் விற்று மற்றொன்றை எதிர் காலத்திற்கான பொருளாதார பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.

நிகழ்காலத்தில் இரண்டாம் நிலை வருமானத்திற்கு வழிவகை செய்துகொள்ளாமல், ஆடம்பரமாக வாழ்ந்து பிற்காலத்தில் பொருளாதார பற்றாக் குறையால் வாடும் குடும்பத்தினரை "வாழ்ந்து கெட்ட குடும்பம்" என்று சமுதாயம் அழைப்பதை நீங்களும் கேள்விப்பட்டிருக்கலாம். அத்தகைய நிலை நம்மில் யாருக்கும் வந்து விடக்கூடாது. தாங்கிப்பிடிக்கும் பொருளாதாரம் இருந்தால் தான் நம் வாழ்வும் அதே நிலையில் தாக்குப்பிடிக்கும் என்பதை உணரவேண்டும்.
வட்டமிட்டு செலவு செய்யுங்கள்... திட்டமிட்டு சேமியுங்கள்...
37 comments:
அக்கறையும் கரிசனமும் கொண்ட பதிவு.
சரியாச் சொன்னீங்க ரோஸ்விக். ஆனா இங்கதான் பேராசையில தொலைச்சிட்டு நாசமா போறதும். நல்ல பகிர்வு.
ரொம்ப நன்றி பாலா அண்ணே!
//உதாரணமாக, 4 லட்சத்திற்கு ஒரு இடம் வாங்குவதற்கு பதிலாக 2 லட்சத்திற்கு 2 இடங்களாக வாங்கி போட்டால், எதிர்காலத்தில் தொழில் செய்ய பணம் தேவைப்படும் பொது ஒன்றை மட்டும் விற்று மற்றொன்றை எதிர் காலத்திற்கான பொருளாதார பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.//..
I strongly agree with your Statement and I am willing to do also...
இந்த கமென்ஸ் கண்டவுடன் , ரூ 2 லட்சத்தை , பட்டாபட்டி ஆபிஸுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்..
நன்றி.. வணக்கம்..
மேல எழுதியது டமாசுக்கு...^
ரோஸ்விக்..நல்ல பதிவு..
அண்ணனுக்காகவே அட்வைஸ் பண்றதுக்கு எழுதின மாதிரி இருக்கு? ரொம்ப் உபயோகமாமுள்ள ஒரு இடுகை. கலக்கல் ரோஸ்விக்... கீப் இட் அப்...
பிரபாகர்.
வரவு எட்டனா செலவு பத்தனான்னுதான் வாழ்க்கை ஓடிக் கிட்டிருக்கு. திட்டமிடனும்..நல்ல பதிவு ரோஸ்விக்..
தேவையான பதிவு.. நல்லா இருக்கு..
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை...என்ற குறளை நினைவுறுத்தியிருக்கிறீர்கள். அருமை!!
சபாஷ்.அவசியமான இடுகை.
//நம் செல்வத்தின் நிலை (Wealth) எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? ஒவ்வொரு மாதமும், நாம் பெரும் ஊதியத்தினை வைத்து எத்தகைய வாழ்க்கைத் தரத்தில் நாம் இன்று வாழ்கிறோமோ அதே வாழ்கைத் தரத்தில், இந்த வருமானம் இல்லாமல் எத்தனை நாட்கள் / மாதங்கள் வாழ முடியுமோ அதே நமது Wealth.//
Perfect Wealth explanation
நல்ல பதிவு .காலையிலேயே படித்துவிட்டேன் .பின்னூட்டம் போட விடவில்லை .
நாம் அனைவரும் நம்மை தயார் செய்துகொள்ள யோசிக்க வைக்கும் பதிவு .நன்று
logan has also made me wondering !
அந்த wealth என்று ஒன்று சொன்னீர்களே. சகலரும் அதை அறிந்த கொள்ள வேண்டும். ரெம்ப நல்ல பதிவு ரோஸ்விக்.
நல்ல பதிவு.
நன்றி அண்ணே.
நன்றி அண்ணே.
நன்றி புலிகேசி.
//logan has also made me wondering !//
புரியல...
//வட்டமிட்டு செலவு செய்யுங்கள்... திட்டமிட்டு சேமியுங்கள்... //
அது முடியாததாகவே இருக்கிறது ரோஸ்விக். மாதங்கள்தான் உருண்டோடுகிறது. சேமிப்பிற்கும் செலவிற்கும் நீண்ட இடைவெளியே காணப்படுகிறது. இருந்தும் முயற்சிகள் தொடர்கிறது.
வாய்ப்பை வைத்து கொண்டு எப்படி நிகழ்காலத்திலும் ,எதிர் காலத்திலும் வசதியாக ( குறைந்த பட்சம் சிரமம் இல்லாமல் ) இருப்பது என்பதை தெளிவு படுத்திய பதிவு . வாழ்த்துக்கள் .
என்பா ரோஸ்விக் 4 இலட்சத்த போய் லேண்ட்ல போட சொல்லற? பேசாம மங்குனி சிட் பண்டுல போட்டா அவனுக்கு உதவியா இருக்கும்ல .(பட்டா ப்ளாக்கு வந்தா கரக்டா இருக்க , உன் ப்ளாக்ல மட்டும் இப்படி ஆயிடுறியே ? )
//4 லட்சத்திற்கு ஒரு இடம் வாங்குவதற்கு பதிலாக 2 லட்சத்திற்கு 2 இடங்களாக வாங்கி போட்டால், எதிர்காலத்தில் தொழில் செய்ய பணம் தேவைப்படும் பொது ஒன்றை மட்டும் விற்று மற்றொன்றை எதிர் காலத்திற்கான பொருளாதார பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.//
ஐடியா நல்லாத்தான் இருக்கு..
சிக்கனமே சிறந்த சேமிப்பு என்பது சரிதான் ரோஸ்விக்
நல்ல பதிவு ரோஸ்விக், நான் எல்லாம் கண்டபடி செலவு செய்துவிட்டு,மாசக்கடைசியில் பர்ஸை தடவுற ஆசாமிங்க. இனிமே இதுல சொன்ன மாதிரி டிரை பண்ணுகின்றேன். நன்றி.
நானும், சேமிப்பிற்கும், செலவிற்குமான இடைவெளியை குறைக்க முயற்சிகள் செய்துகொண்டிருக்கிறேன். :-)
அப்பாட சமாளிச்சாச்சு டா...
நன்றி மங்குனி. இந்த இடம் அப்படி தான்... :-)
நீங்களும் சேமிச்சு முன்னுக்கு வாங்க கிரி.
மிக்க நன்றி.
nalla pathivu .....
see this one also.......
http://buminathan-vazhkhaipathivugal.blogspot.com/
Post a Comment