Friday, March 26, 2010

பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி (புரட்டும் அபாயம்) - 2

பாகம் - 1 முக்கியமானது படிச்சிட்டு வாங்களேன்...


குளோபல் வார்மிங் எனப்படும், இந்த உலக வெப்பமயமாதலால் ஏற்படும் விளைவுகளில் சில
1) காட்டுத்தீ 2) பருவமழை மாற்றம் 3) பனிக்கட்டிகள் உருகி கடல் மட்டம் உயருதல் 4) பல வகையான விலங்குகள் அழிதல் (மனிதன் உட்பட) 5) சில இடங்களில் மழை இன்மை, சில இடங்களில் மழையின் வெள்ளப்பெருக்கு இன்னும் பலப்பல...

இதைப்பற்றி பேசும்போது நாம் Greenhouse Effects பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். நாம் வாழும் இந்த பூமியானது இயற்கையான காற்று மண்டலத்தால் சூழப்பட்டுள்ளது. 150 மில்லியன் கிலோமீட்டர்களுக்கு அப்பால் உள்ள சூரியனிலிருந்து வரும் வெப்பமானது முழுவதும் பூமியை அடைவதில்லை. அதில் மூன்றில் ஒரு பகுதியானது வளிமண்டலத்திலேயே(Atmoshphere) தங்கி விடுகிறது. மீதமுள்ள இரண்டு பகுதியான வெப்பம் மட்டும் நம் பூமியில் இருந்தால், பூமியின் வெப்பநிலை (மைனஸ்) -18 டிகிரி செல்சியஸ் மட்டுமே. இந்த வெப்பம் உயிர்கள் வாழ்வதற்கு உகந்தது அல்ல.



Greenhouses Gases எனப்படும், நீராவி(Water Vapor), கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, ஓசோன் மற்றும் மேகங்கள்(Non-Gas) போன்றவை, பூமியிலிருந்து வெளிப்படும் அகச்சிவப்பு கதிர்களை உள்வாங்கி மீண்டும் வெப்பமாக வெளியிடுகிறது. இதன் மூலம் புவியின் சராசரி வெப்பநிலை +14 டிகிரி செல்சியஸ் ஆக உயர்ந்து உயிர்கள் வாழ சாதகமான சூழ்நிலையை உருவாக்கியது. இந்த நிகழ்விற்குப் பெயர் தான் Greenhouse Effects. இந்த Greenhouse Gases ஒரு குறிப்பிட்ட அளவில் இருந்த பொது அவை நமக்கு நன்மையளித்தன. இப்போது, நமது வாழ்கை முறைகளின் மூலம் இவற்றின் அளவு பெருமளவு அதிகரித்ததே இந்த குளோபல் வார்மிங்கிற்கு காரணம்.




Greenhouse Effects -ற்கு, நீராவி 36 - 72% -ம், கார்பன்-டை-ஆக்சைடு 9 - 26% -ம், மீத்தேன் 4 - 9% -ம், ஓசோன் 3 - 7% -ம் பங்களிக்கிறது. நமது இயற்கையானது சீரான சுழற்சியைக் கொண்டிருந்தது. மனிதனும், விலங்குகளும் ஆக்சிஜனை சுவாசித்து கார்பன்-டை-ஆக்சைடை வெளியிடுகின்றன(ர்). அதற்கு நேர்மாறாக, தாவரங்கள் கார்பன்-டை-ஆக்சைடை உள்வாங்கி பச்சையம் தயாரித்துக் கொண்டு, ஆக்சிஜனை வெளியிடுகிறது. அதே போல, கடல் நீர் ஆவியாகி காற்றோடு கலக்கிறது. இந்த நீராவியும், புவியின் வெப்ப நிலையை உயர்த்துவதில் பெரும்பங்கு வகிக்கிறது. இந்த நீராவி, தாவரங்களால் வெளியிடப்படும் ஆக்சிஜனால் மீண்டும் குளிர்விக்கப்பட்டு மழையாகப் பொழிய வேண்டும். ஆனால், நாம் காடுகளை அழித்துக் கொண்டிருப்பதால், தாவரங்களால் வெளியிடப்படும் ஆக்சிஜனின் அளவு பெருமளவு குறைந்துவிட்டது.

அதே நேரம், மக்கள் தொகைப் பெருக்கத்தால் கார்பன்-டை-ஆக்சைடு அதிக அளவில் வெளியிடப்பட்டு காற்று மாசுபடுகிறது. அதிகப்படியான மக்களுக்கு ஆக்சிஜன் அதிக அளவு தேவை இருக்கிறது. மேலும், நமது வாகனங்களாலும், தொழிற்சாலைகளாலும், குளிர் தரும் சாதனங்களாலும் அதிக அளவு கார்பன்-டை-ஆக்சைடு வெளியிடப்படுகிறது. இதை கிரகிக்கும் அளவுக்கு பச்சைத் தாவரங்கள் போதிய அளவு இல்லை


மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு இரண்டு வாயுக்களும் நாம் உணவிற்காக வளர்க்கும் பிராணிகளின் கழிவிலிருந்து அதிக அளவு வெளியிடப்படுகிறது. இந்த பிராணிகளிலிருந்து பெறப்படும் உணவுப்பொருட்களான, மாமிசம், பால், முட்டை மற்றும் இதரப் பொருட்களை முறையாகப் பிரித்தெடுத்து பதப்படுத்தும் தொழிற்சாலைகளிலிருந்து வெளிப்படும் கார்பன்-டை-ஆக்சைடு, உலகத்தில் ஓடும் ஒட்டு மொத்த கார், ரயில் மற்றும் விமானங்களிலிருந்து வெளிப்படும் கார்பன்-டை-ஆக்சைடைக் காட்டிலும் அதிகம். பிராணிகளின் மூலம் வெளியாகும் கார்பன்-டை-ஆக்சைடை விட மீத்தேன் 70 மடங்கும், நைட்ரஸ் ஆக்சைடு 310 மடங்கும் அதிகம் வெளிப்படுகிறது.



உலகம் முழுவதும் அழிக்கப்படும் காடுகளில் மூன்றில் ஒரு பங்கு இந்த பிராணிகளின் உணவுக்காகவே அழிக்கப்படுகிறது. அதாவது 3.4 மில்லியன் ஹெக்டேர்கள் நிலப்பரப்பு இவற்றின் உணவிற்காக பயன்படுத்தப்படுகிறது. 1 kg மாமிசமானது 36.4 kg கார்பன்-டை-ஆக்சைடை பல வழிகளில் வெளியேற்றுகிறது. மாமிசம் வளர்க்கவும், ஒரு இடத்திலிருந்து பயனாளியின் இடத்திற்கு செல்ல உதவும் வாகனங்களுக்கு செலவிடும் சக்தி, 100 வாட் மின்விளக்கு மூன்று வாரம் எரிய செலவிடும் சக்திக்கு ஒப்பானது. இந்த பிராணிகளின் மூலம் வெளியாகும் இந்த கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு மட்டும் குளோபல் வார்மிங்கிற்கான காரணத்தில் 51% பங்கு வகிக்கிறது என்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.

பெட்ரோல், எரிவாயு, நிலக்கரி மற்றும் சிமென்ட் உற்பத்தியின் மூலம் வெளிப்படும் கார்பன் 2004 -ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின்படி ஒரு வருடத்திற்கு 8000 மில்லியன் மெட்ரிக் டன்கள். தற்போது மேற்கூறியவற்றின் பயன்பாடு முந்தைய காலங்களை விட மிக அதிக அளவு உயர்ந்துள்ளது எனில், தற்போதைய கார்பன் வெளியீட்டு அளவை கற்பனை செய்து பாருங்கள்.

விலங்குகளின் சாணங்களில் இருந்தும், இன்னும் பிற கழிவுப் பொருட்களில் இருந்தும் மீத்தேன் வாயு வெளிப்படும். சில சமயங்களில் சாக்கடை, செப்டிக் டாங் அல்லது கிணறுகள் சுத்தம் செய்யும்போது விஷ வாயு தாக்கி சிலர் இறந்ததாக செய்திகளில் படித்திருப்பீர்கள். இந்த மீத்தேன் வாயு தான் அந்த விஷ வாயு. இதனை சமையல் எரிபொருளாகவும் உபயோகிக்கலாம். இத்தகைய விஷத் தன்மையுள்ள இந்த மீத்தேன் வாயு, கடலுக்கடியில் உறைந்த நிலையில் உள்ளது. புவியின் வெப்பம் உயரும்போது அவையும் கடலின் மேற்பரப்பு மூலம் காற்றில் கலந்து பல உயிரிழப்புகளையும், வெப்பத்தையும் ஏற்படுத்தும்.

முந்தைய பதிவில் நண்பர் குறிப்பிட்ட அவரது கருத்திற்கு எனது பதில்.
KATHIR = RAY said...
பனி மலைகள் உருகும்போது நீர் ஆவியாகி கொண்டு தான இருக்கிறது அப்போது பூமி முற்றிலும் மூழ்கிவிடும் என்ற அபாயம் இல்லை அல்லவா. அழிவு நிரந்தரம் முன்பு கண்ணுக்கு தெரியாமல் நடந்து வந்தது இப்போது நமக்கு புலப்படுகிறது அவ்ளோதான் சுழற்சி நடந்து கொண்டு தான் இருக்கும் . இதை நாம் அப்டியே ஏற்று கொள்ளத்தான் வேண்டும் இதனை தடுக்கவோ தவிர்கவோ இயலாது. மண்ணில் இருந்து வந்தோம் மண்ணிற்கே செல்கிறோம்

நண்பரே, நீங்கள் சொல்வது போல் பனி மலைகள் உருகி அந்த நீரும் ஆவியாகத்தான் ஆகிக்கொண்டிருக்கும். இந்த நீராவியே வெப்பநிலையை உயர்த்தும் காரணிகளுள் முக்கியமான ஒன்று. இந்த பனி மலைகள் உருகுவதன் மூலம் கடல் நீர்மட்டம் சில அடிகள் மட்டுமே உயரும். இதனால், உலகம் முழுவதும் மூழ்கிவிடாது. கடற்கரை ஓர கிராமங்கள் மூழ்கடிக்கப்படும். அதிக பட்ச நீர் ஏற்கனவே உள்ள அதீத வெப்பத்தால் ஆவியாகி, இன்னும் வெப்ப நிலையை உயர்த்தும். இந்த நீராவியின் ஒரு பகுதி, மீண்டும் குளிவிக்கப்பட்டால் பெருமழை பெய்து வெள்ளம் உருவாகி பெரும் சேதத்தை உண்டு பண்ணும். இந்த அனைத்து காரணிகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையன. மேலும், இது வழக்கமாக நடக்கும் ஒரு நிகழ்வுதான் என நீங்கள் எண்ணுவது சரியே. ஆனால், எதிர் பாராத விதமாக பெரும் வேகத்தில் இந்த அழிவு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அனைவரும் ஒரு நாள் நீங்கள் கூறுவது போல, மண்ணுக்குத் தான் செல்லப்போகிறோம். நாம் இந்த உலகத்தில் அனுபவித்ததை, நம் சந்ததியினரும் அனுபவிக்க ஒரு வாய்ப்புத் தரலாமே!



இன்னும் சில புள்ளி விபரங்களையும், உலக வெப்பமயமாதலை குறைக்க நாம் உடனடியாக செய்ய வேண்டியவற்றையும் அடுத்த பதிவில்(நிறைவு) காண்போம்.




23 comments:

Chitra said...

Subject matter இல், நிறைய research செய்து அசத்தி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!

தமிழ் உதயம் said...

படித்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருந்த பதிவு. நன்றி.

ஜெய்லானி said...

வளர்ந்த நாடுகள் தான் இதற்கு முழுக்காரணம். அதிக தீணிப்பண்டாரம் அமெரிக்க காரந்தான். இன்னும் எத்தனை B T( தக்காளி , கத்திரி, முட்டைகோஸு) வந்து மன்னை நாசமாக்க போகுதோ!!.

Jaleela Kamal said...

குலோபல் வாமிங் பற்றி நல்ல விரிவாக்கம், நலல் தொரு பகிர்வு, கண்டிப்பா இத என் பதிவில் லிங்க் கொடுத்து எல்லோரையும் படிக்க வைக்கனும்

நாடோடி said...

புள்ளி விப‌ர‌ங்க‌ளுட‌ன் விள‌க்க‌ங்க‌ள் அருமை ந‌ண்பா!..க‌த்திருக்கிறேன் அடுத்த‌ ப‌திவுக்கு.

தங்க முகுந்தன் said...

வாசித்தேன் - எங்களால் என்ன செய்யலாம்?

அன்புடன் மலிக்கா said...

புலி அறிமுகத்திற்க்கு வாழ்த்துக்கள்.

அருமையான பதிவு அனைவரும் படிக்கவேண்டும்.. பாராட்டுக்கள் ரோஸ்விக்..

பித்தனின் வாக்கு said...

நல்ல பதிவு,விவரமாக புள்ளி விபரங்களுடன் பதிவிட்டுள்ளீர்கள். மிகவும் அருமை என்றாலும் படங்களைப் பார்த்தவுடன் பகீர் எங்கின்றது. தொடர்ந்து எழுதுங்கள். நன்றி

பனித்துளி சங்கர் said...

மிகவும் பயனுள்ள தகவல் . பகிர்வுக்கு நன்றி .
தொடர்ந்து எழுதுங்கள் !

'பரிவை' சே.குமார் said...

இன்றுதான் உங்கள்தளம் பார்த்தேன். விஷயங்கள் அதிகம். அடிக்கடி வருவேன்.

கிரி said...

ரோஸ்விக் என்ன இப்படி அப்துல் கலாம் கஸ்தூரி ரங்கன் மாதிரி விவரங்கள் தரீங்க! :-))) உங்கள் நல்ல எண்ணம் வாழ்க.

ரோஸ்விக் said...

Chitra - பாராட்டுக்களுக்கு நன்றி சித்ரா. உண்மையிலேயே நிறைய நேரங்கள் பிடித்தது இந்த தகவலை திரட்டுவதற்கும், புரிந்துகொள்வதற்கும். :-)

ரோஸ்விக் said...

தமிழ் உதயம் - ஒரு சிலராவது உண்மையிலேயே வாசித்து, சில விஷயங்களை தெரிந்து கொண்டிருந்தால், நான் செலவழித்த நேரங்கள் வீண்போகவில்லை என்று மகிழ்கிறேன். மிக்க நன்றி சார்.

ரோஸ்விக் said...

ஜெய்லானி - மிக்க நன்றி ஜெய்லானி. நாமும் நம்மால் முடிந்தவரை இதற்கு ஆவண செய்வோம்.

ரோஸ்விக் said...

Jaleela - மிக்க நன்றி ஜலீலா அக்கா. முடிந்த அளவு இந்த தகவல்களைப் பரப்புங்கள். மக்கள் கொஞ்சம் விழிப்புணர்வு அடையட்டும்.

ரோஸ்விக் said...

நாடோடி - காத்திருந்து வாசிக்கும் அளவுக்கு இந்த பதிவு மனதில் இடம்பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி நண்பரே. இறுதி பாகத்தையும் படித்து விடுங்கள். மிக்க நன்றி.

ரோஸ்விக் said...

தங்க முகுந்தன் - தங்கள் ஆர்வத்தில் நான் மிகவும் மகிழ்கிறேன். இப்படியொரு நல்லெண்ணம் இருந்தாலே இந்த உலகம் சீக்கிரம் அழிந்துவிடாது. மிக்க நன்றி நண்பரே.

ரோஸ்விக் said...

அன்புடன் மலிக்கா - வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி மலிக்கா.

ரோஸ்விக் said...

பித்தனின் வாக்கு - மிக்க நன்றி அண்ணா.

ரோஸ்விக் said...

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ - தங்களின் தொடர் வருக்கைக்கு நன்றி சங்கர்.

ரோஸ்விக் said...

சே.குமார் - இது போன்ற நண்பர்களின் பாராட்டுக்களே என் விஷயங்களை அதிகப் படுத்த செய்கிறது. மிக்க நன்றி குமார்.

ரோஸ்விக் said...

கிரி - நல்ல வேளை கிரி... விஜயகாந்து மாதிரி-னு சொல்லாம போனீங்களே! :-) மிக்க நன்றி.

Viravanalluran said...

Global warming is blown out of proportion. I wish to bring these to your notice:
[1]78% of our globe is covered with ocean and sea.
[2] Land comprises less than 22% and the changes that is happening in the land can NOT drastically change the weather. However the nature of weather is to change constantly.
[3] Flood, rainfall may vary in space and time and that need NOT be attributed to global warming,if any, alone.
[4] There are ocean related EL NINO / LA NINA, ENSO activities which determine the global rainfall pattern and some times cyclones and typhoons.
[5] Further the wettest places of the world be it Ramantak,Manshiram near Cherrapunji or Hawai islands or Chinna Kallar in Coimbatore district the vegetation has NOTHING TO DO with the rainfall.
[6] The presumption that Oxygen gives rain has no scientific proof. Instead during descending air the air is compressed and it becomes hot and dry leaving behind only the major constituents of gas. Here Oxygen will some time be predominant. [This is the cause of most Forest Fire in the world]
[7] Contrary to belief developed nations use corns, soya a s fuel and this badly going to affect FOOD SECURITY.
[8] Similarly Carbon Account is a tactics to curtail developing nations usage fossil fuel. This is indirect way of getting more share for them.
[9] To change is nature and Tsunamis and other greater natural disaster can NOT be avoided. Technology ans science has developed to a stage to early warn them only but can NOT prevent it. Thus sinking of small islands due to Tsunami wave or severe cyclones due to ENSO activities may happen. This is nothing to do with warming.
[10] However when more fossil fuel is burnt or more carbon di oxide is taken to higher level in atmosphere then it will damage ozone there and this will enable UV and other vulnerable rays to penetrate our earth.
Be Happy and worry less about Global warming.