Tuesday, February 23, 2010

தெரிந்துகொள்வோம் - 8

*_/|\_* பூமியில் தண்ணீரின் பரப்பளவு 148 கோடியே 95 லட்சத்து 8 ஆயிரம் சதுர கிலோமீட்டராகும்.

*_/|\_* பஹ்ரைன் நாட்டின் தேசிய கீதம் வார்த்தைகளால் பாடப்படாமல் இசையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

*_/|\_* மனிதர்களுக்கு கேட்காத அளவிற்கு ஒலிக்கும் ஒலியை 'கீழான ஒலி' (Infra Sound) என்று அழைப்பார்கள்.

*_/|\_* உலகின் மிகப்பெரிய விளையாட்டரங்கம் பராகுவே நாட்டில் உள்ளது. அதன் பெயர் 'ஸ்ட்ராஹாவ் ஸ்டேடியம்'.

*_/|\_* 'அக்டோபர் புரட்சி' என்றாலும், அதைக் கொண்டாடுவது நவம்பர் 7- ம் தேதி தான்.

*_/|\_* ரஷிய கடற்படைதான் உலகில் மிகப் பெரியது.

*_/|\_* ஆக்ரா நகரின் பழைய பெயர் 'அக்பராபாத்'.

*_/|\_* யானை வேட்டைக்கு 'கெட்டா' என்று பெயர்.

*_/|\_* சோமாலி நாட்டுச் சிங்கங்களுக்கு பிடரி மயிர் கிடையாது.

*_/|\_* உப்பு நிறைந்த கடல் நீரைப் பருகுகிற ஒரே இனம் (பறவை) பெங்குவின் தான்.

*_/|\_* 15 வயதிலேயே பிலிப்பைன்ஸில் ஒட்டு போடலாம்.

*_/|\_* இந்திய அரசு தேர்ந்தெடுத்துள்ள 58 சுற்றுலா இடங்களில் 11 தமிழ் நாட்டில் உள்ளது.

*_/|\_* தமிழகத்தில் உள்ள கடற்கரையின் மொத்த நீளம் 912 கி.மீ.

*_/|\_* 'மாஸ்டாங்' என்பது குதிரையேற்றத்தை குறிக்கும் சொல்.

*_/|\_* 'எந்திர மனிதர்களின் தீவு' என்று அழைக்கப்படும் நாடு ஜப்பான்.

*_/|\_* 1600-க்கு மேற்பட்ட அழகு மிகுந்த ரோஜாப்பூ வகைகளுடன் 36 ஆயிரம் ரோஜா செடிகளைக் கொண்டுள்ள, இந்தியாவின் மிகப்பெரிய ரோஜா தோட்டம் சண்டிகாரில் உள்ளது.

*_/|\_* முதன்முதலாக முழுவதும் செயற்கை முறைகளில் (Synthetic Methods) உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக்கின் பெயர் 'பேக்லைட்'.

*_/|\_* திப்பு சுல்தான் ஆட்சிக் காலத்தில் மைசூரின் தலைநகர் ஸ்ரீரங்கப்பட்டினம்.

*_/|\_* 'பிரெஸ்ட் ஸ்ட்ரோக்' என்ற சொல் 'நீச்சல்' விளையாட்டோடு தொடர்புடையது.

*_/|\_* வரண்ட இடத்திற்குத் தக்கவாறு தன்னை வளர்த்துக்கொள்ளும் தாவரங்களை 'சோரோஃபைட்' என்று அழைப்பார்கள்.

*_/|\_* சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் 1952-ல் நடைபெற்றது. அப்போதைய தேர்தல் செலவு ரூ.10.45 கோடி. வாக்காளர்கள் 17.3 கோடி.

*_/|\_* சூயஸ் கால்வாயின் நீளம் 169 கிலோமீட்டார்.

*_/|\_* முள்ளம்பன்றியின் முதுகில் உள்ள முட்களின் எண்ணிக்கை சுமார் 30 ஆயிரம் ஆகும்.

*_/|\_* ஒட்டகச்சிவிங்கி பிராணிகளிலேயே ஊமையாகும். இதனால் சாதாரண ஒலியைக் கூட எழுப்ப முடியாது.

*_/|\_* கி.பி. 1610-ல் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மொத்த மக்கள் தொகை வெறும் 350 பேர்கள்தான்.




15 comments:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

என்ன ரோஸ்விக்..
ஒரு 10 வருடத்திற்க்கு முன்னாடி சொல்லியிருந்தா , க்விஸ்-ல பிரைஸ் வாங்கியிருப்பேன..
சே.. வடை போச்சே...

தமிழ் உதயம் said...

தெரியாத பல தகவல்களை தெரிந்து கொண்டேன்.

Chitra said...

ரோஸ்"கூகிள்"விக்

Thenammai Lakshmanan said...

அட உப்புத்தண்ணியக் கூடக் குடிக்கிறாங்களா அவங்க

அடடா இவ்வளவு உயரமா இருந்தும் ஊமையா

ஈ ரா said...

சுவாரசியமான தகவல்...

நன்றி

அன்புடன் நான் said...

தெரியாத தகவல்... பகிர்வுக்கு நன்றிங்க,

நாடோடி said...

பல தகவல்களை அறிந்து கொண்டேன்...தொடருங்கள்..

புலவன் புலிகேசி said...

உங்களிடமிருந்து தெரிந்து கொள்ள நிறைய இருக்கிறது

சிவாஜி சங்கர் said...

ரோசா பொய் முடி அண்ணே.. நல்லா இருக்கியளா?? என்ன உள் குத்தையே காணோம்??

பனித்துளி சங்கர் said...

தெரியாத பல விசயங்கள் இங்கு தெரிந்துகொண்டேன் . பகிர்வுக்கு நன்றி நண்பரே !

ஜெய்லானி said...

கடைசியா சொன்னதுதான் வித்தியாசமா இருக்கு. என்ன ஒரு மாற்றம் இந்த 400 வருசத்திலே!!!!!

மங்குனி அமைச்சர் said...

சார் வணக்கம்
மறுபடியும் ஸ்கூல்ல சேர்த்து விட்ருவிக போல இருக்கே ?

ரோஸ்விக் said...

அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள். சில சொந்த பணி சுமைகள் காரணமாக அனைவருக்கும் மறுமொழி இட முடியவில்லை. மன்னிக்கவும்.

இந்த பதிவு, பல விஷயங்களை அனைவருக்கும் அறிய செய்ய வேண்டும் என்ற நோக்கில் தொகுக்கப்பட்ட ஒன்றே. ஆதலால், இதன் பெருமை என்னை சேருவதில் நியாயமில்லை.

படித்து பயன்பெற்ற அன்பு நண்பர்களுக்கு என் நன்றிகள். :-)

பத்மநாபன் said...

எல்லா தகவல்களும் புத்தம் புதிதாக முதன் முதலில் படிப்பது போலவே உள்ளது ... தேர்வு செய்ய நன்றாக உழைத்து உள்ளீர்கள்
நன்றியும் வாழ்த்தும் ...

Priya said...

நல்ல தகவல்கள், நன்றாக தேர்வு செய்து எழுதி உள்ளீர்கள்!