மக்கா... இது நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்டது. யாரும் படிச்சுபுட்டு என்னை புட்டு வச்சிராதீக. இது லந்துக்காக எழுதுறதுன்னு புரிஞ்சுக்காம நொந்து போகாதீக. நம்மளும் புனை பெயருல எழுதுவம்னு "ரோஸ்விக்"-னு வச்சு எழுதுனா... பல பேரு நாக்குல பல்லு படமா நாரகாசம் பண்ணிட்டாங்க... ஒருத்தன் என்னடானா ரோஸ் விக்கிறீங்கலானு கேக்குறான்.... இன்னொருத்தன் உங்க விக்கு ரோஸ் கலரான்னு கேக்குறான்... இன்னொரு படவா உம பேர தமிழ்படுத்துன்னு சொல்லி "ரோஜா பொய் முடி"-னு மாத்திபுட்டான்...
நம்ம ஊர்ல பல ஜோதிடங்களைப் பார்த்து நம்ம மன திடத்தை மறந்து, பல பேரு மண்டைய சொரண்டி ஒரு பேரு வைப்பாங்க... அத நம்ம ஆளுக ரொம்ப எளிமையா நக்கலடிச்சு நாக்குல ஊஞ்சல் கட்டி விட்டுருவாய்ங்க. இந்த மாதிரி பெயர்களை நக்கலடிக்கிற குசும்பு எனக்கும் இருந்திருக்குங்க...
என்னோட நண்பர் மணி திருவனந்தபுரத்துல தொழிலதிபரா இருக்காரு. ஒரு நாளு ரொம்ப சுவாரஸ்யமா, அவர் திருமணத்திற்காக பாத்திருந்த பொண்ணை பத்தி ரொம்ப பெருமையா சொல்லிக்கிட்டு இருந்தாரு... (அந்த பொண்ணு எனக்கு தங்கச்சி முறையா இருந்தாலும் விட்டுவைக்கல...) அப்ப நான், எல்லாஞ்சரிதான் மணி... ஆனா ஒரு சின்ன பிரச்சனை இருக்குன்னு சொல்ல, அவரு சீரியஸா என் மொகத்தை பார்த்து என்ன அண்ணானாரு. நாங்கெல்லாம் வீட்டுக்கு வரும்போது, என் தங்கச்சி காபி கொண்டுவரும். அப்போ நீங்க பேரு சொல்லி கூப்பிடக்கூடாது சொன்னேன். ஏன்னு அவரு கேக்க... நீங்க "சிந்து... சிந்து"-னு கூப்புட்டா புள்ள காபி-யை சிந்திறாதா-னு? கேட்டேன். இதை படிச்ச உடனே நீங்க என்ன ரியாக்சன் கொடுத்திங்களோ அதேதான் அவரும் கொடுத்தாருன்னு வச்சுக்கங்க... :-)
என்னுடன் வேலை பார்த்த தோழி ஹேமா, அவங்க வீட்டுல நடந்த சம்பவங்களை அப்பப்போ சொல்லுவாங்க... அப்படி ஒரு சம்பவத்தை சொல்லும்போது, அவங்க "எங்க அம்மா என் தங்கைய, 'வித்தியா... வித்தியா'-னு கத்துறாங்க... அவ பேந்த பேந்த முழிக்கிறா"-ன்னாங்க. நான் கேட்டேன், "உங்கம்மா தெளிவா, எதை வித்தானு கேட்டிருந்தா? அவ ஏன் அப்படி முழிக்க போறான்னு?". அடுத்த நாள் அம்மணி அரை நாள் லீவு... நான் பயந்துட்டேன் நம்மள அடிக்க தான் ஆள் கூட்டிட்டு வரப் போயிருக்காங்கன்னு.. :-))
எங்களோட பழைய எம்.எல்.ஏ. பேரு சொக்கலிங்கம். அவர ஊரு ஆளுங்க எல்லாரும் சுருக்கமா "சோனா (சொனா) " வராரு... சொன்னாரு-னு சொல்லுவாங்களாம். எங்க அப்பா இதை எங்ககிட்ட சொல்லிக்கிட்டு இருந்தாரு. உடனே நான், இதுக்காக நம்ம, இப்போ உள்ள எம்.எல்.ஏ-வை சுருக்கிக் கூப்பிட்டா நல்லாவாப்பா இருக்கும்னு? கேட்டேன். விழுந்து விழுந்து சிரிச்சாரு... (எங்க விழுந்துனு கேக்ககூடாது) ஏன்னா, எங்க தற்கால எம்.எல்.ஏ பேரு "சுந்தரம்". விடுவமா நம்ம... இப்போவும் எங்க வீட்டுல "சூனா" வந்தாரா? "சூனா" என்ன சொன்னாரு? அப்புடின்னு கேட்டுக்குவோம்.

என் அண்ணியோட மக பேரு "எல்சி". எனக்கு முதன்முதலா அறிமுகம் செஞ்சுவச்சப்ப... நான் சும்மா இருக்காம, "நீ, எல்சி-யா?.... எஸ்.எஸ்.எல்.சி-யா?"-னு கேட்க... இன்னைக்கும் என்னைய பார்த்தா வேகமா ஓடி கட்டிலுக்கு கீழ ஒழிஞ்சுக்குவா அந்த ரெண்டாம் வகுப்பு படிக்கிற குழந்தை. :-)
இது மாதிரி நிறைய கதை இருக்குங்க... அடுத்து எப்பவாவது சந்தர்ப்பம் கிடைக்கும்போது மீண்டும் தொடர்கிறேன். படிக்கிற நீங்க என்னைவிட ரொம்ப குசும்பு புடிச்சவங்கனு தெரியும். இப்புடி பெயர்களை நீங்க கலாய்ச்ச தருணங்களை தனி பதிவாவோ, இல்ல இங்க பின்னூட்டமாவோ போடுங்க... சிரிச்சு சிரிச்சு விளையாடுவோம்.
52 comments:
எங்கேயோ இடிக்கற மாறி தெரியுது...
வெளியூரு , நம்ம ரோஜா பதிவிக்கு வந்து கும்மியடிக்கலாமா?...
தம்பி,
ரோஜா பொய்முடி... இது கொஞ்சம் ஓவரா தெரியல!
மக்கா, எப்படியெல்லாம் யோசிச்சி மொக்கறீங்க.... முடியல!
பிரபாகர்.
லாடு லபக் தாஸ் ரேஞ்சுக்கு ஆயிட்டீங்களே "பொய் முடி"...
இம்ம் நல்லாதான் இருக்கு. நல்ல வேளை உங்க ஊரு கோவிந்தசாமி இல்ல, இல்லைனா கோணா வந்தா, சொல்லியிருப்பிங்க. அப்புறம் ரோஸ் வியாபாரம் எப்படி இருக்கு. நீங்கதான் "ரோஸ் விக்கு"ரவர் ஆயிற்றே. இதை நீங்கள் தமிழ் படுத்தினால் நான் பொறுப்பு அல்ல. நன்றி.
(எல்லாருக்கும் )
கேக்கு'தா
கேக்கு'தா
:))
நல்லா பேர் வச்சீகப்பு ...:-)
ரோஸ் "விக்"கல் - எப்படி இருக்கீங்க?
//நக்கல் பேர்()வழியா நீங்கள்?//
ஆமாம்பா !! ஆமாம் !!
நல்ல டமாஸ் , தலீவரே !!
நான் எதோ நீங்க விக் முடி விக்கறவரு போல... முன்னாடி ரோஸ் சேத்திட்டிங்கன்னுள்ள நினைத்தேன்... ஆனா செம கலாய் கலாச்சிட்டிங்க...
அடக்கடவுளே... இப்படியுமா?
புனைப் பெயர்கள் எல்லாம் ரெம்ப நல்லா இருக்கு..
//என் அண்ணியோட மக பேரு //
ஏங்க இதுக்கு நீங்க என் அண்ணன் பொண்ணு பேருன்னு சொல்லி இருக்கலாம்... இதுலயும் நக்கலா?!?
நடத்துங்க....
நகைசுவை உணர்வு எல்லாருக்கும் இருப்பதில்லை.கொடுத்து வைத்தவர் ரோஸ்விக் நீங்கள்.
:)). நடத்துங்க ராசா
உங்க பேரு மாதிரி தான் என் பேரும் "சங்கர் கவி" :-)
நான் உங்களை கவிதைன்னு தான் கூப்பிட முடியும். நானும் ஆம்புளையா இருக்கதால.. "காதலா"-னு கூப்பிட முடியாது. :-))
உங்க பேர பார்த்த உடனே... இந்த நாடோடி... பட்டோடியின்... பின்னோடியானு கேக்க வாய் வருது தல... சும்மா தமாசுக்குத் தான்... தப்பா எடுத்துக்காதீங்க...:-)
ஆனா, என் குசும்பு மேல உங்களுக்கு ரொம்ப நம்பிக்கை அண்ணே... ரொம்ப நன்றி. :-)
அதை எழுத்துக்கள்ள கொண்டு வருவது முழுவதும் சாத்தியப்படல...
//நம்மளும் புனை பெயருல எழுதுவம்னு "ரோஸ்விக்"-னு வச்சு எழுதுனா... பல பேரு நாக்குல பல்லு படமா நாரகாசம் பண்ணிட்டாங்க... ஒருத்தன் என்னடானா ரோஸ் விக்கிறீங்கலானு கேக்குறான்.... இன்னொருத்தன் உங்க விக்கு ரோஸ் கலரான்னு கேக்குறான்... இன்னொரு படவா உம பேர தமிழ்படுத்துன்னு சொல்லி "ரோஜா பொய் முடி"-னு மாத்திபுட்டான்...// செம சூப்பர்ர்ர்
எப்படிலாம் யோசிக்கிறாங்க....
கலக்கல் ரோனா :))
@ரோஸ்விக் said...
பட்டாபட்டி.. - எங்கயும் இடிக்கலைய்யா... எல்லாம் நீங்க பண்ணின அழும்பு தான்... இப்போ தழும்பா... :-)))
//
என்ன ரோஸ்விக்..
நாங்க எவ்வளவு நல்ல பையன்கள்-னு ஊருக்கே தெரியும்..
எங்களப்போயி.. ஹி..ஹி..ஹி
அட சூப்பரா !! நம்ப கமண்ட்டுக்கு மட்டும் பதில் குடுக்காத , தாண்டி பூட்டியே !! சூப்பர் தல !!
நல்லாத்தான் லந்து பண்றீங்க தலைவரே...
ஆமா உங்க பேருக்கு அர்த்தமென்ன? (எல்லாரும் கேட்டுட்டாங்க..ஹி...ஹி...)
ஒருவழியா நம்ம பக்கம் ஆளும் கட்சியும் "கை"-யை காட்டிடுச்சு... :-)
எம்பேருக்கு நீங்க ஒரு அர்த்தத்தை கண்டுபுடிச்சு வச்சிட்டு போங்களே.. :-))
உங்க பேருல "க"-வுக்கும் "பாலாசி"-க்கும் நடுவுல புள்ளி வைக்க மறந்துராதீங்க தல... (தமாசு) :-)
@ரோஸ்விக் said...
பட்டாபட்டி - ஆமா... ஆமா... நீங்க ரொம்ப நல்லவங்கடே... :-)))
//
எங்களை நல்லவர்கள் என்று சொன்ன ரோஸ்விக் வாழ்க..
அவருக்கு, லஞ்சம் கொடுக்காமலே கவர்ன்மெண்ட் கான்ராக்ட் கிடைக்க
எல்லா வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்..
சார்.. ஏதாவது பார்த்து போட்டு குடுங்க சார்...
பாராட்டு விழாக்கு ( எனக்கு ) எங்க , எப்போ வரனுமுனு சொல்லுங்க.. ரெண்டு நாளைக்கு முன்னாடியே
வந்துவிடுகிறேன்...
நீங்க என்னை காதலா'ன்னு கூப்பிட வேண்டாம்.
கவிதைகளின் காதலா'ன்னு கூப்பிடலாம் இல்லையா?..
(ஏன்னா நான் இதுவரைக்கும் யாருக்கும் காதலனா ஆகலை. இதை நீங்க நம்பித்தான் ஆகணும்.
நம்பலைன்னா அந்த விரல் வித்தை தம்பி நடிச்ச படத்தை நீங்க நூறுவாட்டி பார்க்கணும்.)
நீங்க தான் விவேக்குக்கு ஐடியா குடுத்திரிப்பிங்க போல .... சாட் பூட் திரி வரைக்கும் .
அப்புறம் சின்ன வயசுல வாத்தியார்களுக்கு பெயர் வைக்கிற சுகமே தனி .
( அப்படியே நம்ம தோட்டத்துக்கும் வந்துட்டு போங்க ... வந்து கிண்டலாவது ......)
எப்பே..எந்த நாசமா போன பயலே உமக்கு இந்த பேரயெல்லாம் வெச்சது...ச்சை...ஒரு பெரிய மனுசன எம்புட்டு அசிங்கபடுதிருகாங்கே..யாருலே அவங்கே...கூப்டு வாலே..நம்ம ஏரியாவுக்கு...பீச பேச விட்டு சங்க அறுத்துருவோம்.. :)
@ILLUMINATI said...
தல.புது போஸ்ட் ஒண்ணு போட்டு இருக்கேன்.வந்து பாத்துபுட்டு எப்டி இருக்குன்னு சொல்லுங்க.
http://illuminati8.blogspot.com/2010/02/wasabi-punisher-max.html//
எலேய் இந்த பய தொந்தரவு பெரிய தொந்தராவால்ல இருக்கு..இந்த அயோக்ய படுவாவுக்கு யாராச்சும் மருந்தடிங்கப்பு...!!
ரோஸ்விக் என்னா குயந்த மனசு, பச்சை மண்னு, நீ எங்க இருதாலும் நல்லா இருப்ப போடா (சாரி பார் தி "டா ")
உன்னைய நெனச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு, நீ எங்க இருந்தாலும் போலைச்சுகுவ. (ஐயா நான் கொஞ்சம் புதுசு )
நம்ம பட்டாப்பட்டி ப்ளாக்-ல இருந்துதான் உன் அட்ரஸ் புடிச்சேன். எல்லாம் ஒரு குரூப்பாத்தான் அலைகிரிக
நான் இப்பதான் அடியாளாகிருக்கேன் இன்னும் கொஞ்ச நாளால் ரவுடி ஆகிடுவோம்ல
//எங்களை நல்லவர்கள் என்று சொன்ன ரோஸ்விக் வாழ்க..
அவருக்கு, லஞ்சம் கொடுக்காமலே கவர்ன்மெண்ட் கான்ராக்ட் கிடைக்க
எல்லா வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்..//
பட்டு... அதான் கவர்மெண்டை ஏற்கனவே ஒரு குடும்பம் காண்ட்ராக்ட் எடுத்துருச்சுல்ல.... அப்புறம் எப்புடி நமக்கு கிடைக்கும்... சொல்லு??
விண்ணைத் தாண்டி வருவாயா, தொட்டி ஜெயா - இதெல்லாம் பாக்கலாம்... :-)
//
நல்ல மருந்தா வாங்கி அடிச்சு அவன் சோலிய முடிச்சுருயா... தொல்லை தாங்கலை... :-)
மருந்து காசை நான் தாரேன்...
Post a Comment