உலகத்துலேயே உனக்குப் பிடிச்ச ஒரு பெண்மணி யாருன்னு கேட்டா, எல்லாரும் யார் யாரையோ சொல்லுவோம். இல்லையினா என் அம்மா தான்னு சொல்லுவோம். ஆனா, நான் என் அப்பாயியை (அப்பத்தா) தான் சொல்லுவேன். குறைந்தபட்சம் எங்க அப்பாயிக்கு வயது 75 இருக்கும். இன்றும் நல்ல திடகாத்திரமான உடம்புடன், ஆரோக்கியமா இருக்காங்க. ஒரு பல்லு பூச்சி இல்லை. இன்னைக்கும் அவங்களால எனக்கு ஆட்டு எலும்பை கடிச்சி அதுல உள்ள மஜ்ஜையை எடுத்து தர முடியும். இவங்க பல்லு விளக்குறதுக்கு பயன்படுத்துறது ஏதோ வெளிநாட்டு பற்பசையை பயன்படுத்தல.
சொன்னா உங்களுக்கு அசிங்கமாத் தெரியலாம்... இருந்தாலும் சொல்லுறேன். மாடு சில சமயங்கள்ல ஒரு குறிப்பிட்ட பதத்துல சாணத்தை குமிழ் குமிழா போடும். அதை மண்ணுபடாம எடுத்து காயவச்சு, கரி அடுப்புல சுட்டு, சாம்பலா எடுத்து ஒரு டப்பாவுல போட்டு வச்சுக்குவாங்க. காலையில எழுந்ததும் இதை வச்சுதான் பல்லு விளக்குவாங்க. தலைக்கு தேய்க்கிறது பெரும்பாலும் வேப்ப எண்ணைதான். எங்க மரத்துல இருந்து அவங்களே பக்குவமா தயார்பண்ணிகிட்ட வேப்பெண்ணை தான். வெளியூர் விஷேசங்களுக்கு பேருந்தில் செல்லும்போது மட்டும் மற்றவர்களின் சௌகரியம் கருதி தேங்கா எண்ணெய். உடல் அலுப்பு, ஜலதோஷம், காய்ச்சல் வருதல் போன்ற வியாதிகளுக்கு இவர்களின் முதல் மருந்தும் இந்த வேப்ப எண்ணெய் தான்.
இவங்க உடம்பைவிட(உடல் நலத்தை விட) இவங்க மனத்தை பார்த்து நான் ரொம்பவே வியந்து போயிருக்கேன். இவங்க பொறந்த இடம் அந்த காலத்துல ஓரளவு வசதியான குடும்பம். வாக்கப்பட்டது (திருமணம் ஆனது) அதே உள்ளூரான மிகச் சிறிய கிராமத்துல தான். எங்க அய்யாவும் ஓரளவு வசதியா இருந்தவருதான். பங்காளிகளின் பாகப்பிரிவினையால் ஏதோ இவருக்கு கொஞ்சம் ஓர வஞ்சகம் செய்ததாக கேள்விபட்டிருக்கிறேன். அவரு ஒரு படிக்காத மேதை. நான் சிறு பிள்ளையா இருக்கும் போதே அவர் இறந்துவிட்டார். விவசாயம், ஆடு வளர்த்தல் எல்லாம் செய்து தான் பார்த்தார்கள். ஆனால், ஒரு நாளைக்கு பெரும்பாலும் ஒரு வேலை மட்டுமே சோறு உண்ண முடியும். சில மாதங்களில் இருவேளை உணவு உண்ணும் அளவுக்கு வசதி வரும்.
பசிக்கும் நேரம் பெரும்பாலும் காபித் தண்ணி தான். அதுவும் சர்க்கரை இல்லாமல். எப்போதாவது குடும்பத்துடன் அமர்ந்து காப்பி அருந்தினால், காப்பியுடன் சேர்த்து ஒரு சிறிய வெல்லக்கட்டி அனைவருக்கும் கையில் அளிக்கப்படும். இப்போது விளம்பரங்களில் வருவது போல ஒரு மடக்கு காப்பி, ஒரு நக்கு வெல்லக்கட்டி. ஒரு அனா சம்பளத்திற்கு ரயில் தண்டவாளம் அமைக்கும் வேலைக்கு சென்று மூன்று மகள், ஒரு மகனை வளர்த்து வந்தார். அனால் இதுவரை அவர் ரயிலில் பயணம் செய்ததில்லை. வறுமையிலும் செம்மையாய் வாழ்ந்தவர்களின் வரலாறு படித்த எனக்கு... வரலாறாய் வாழ்ந்து காட்டிக்கொண்டு எனக்கு பிரமிப்பூட்டுகிறார் என் அப்பாயி.
எவ்வளவு வறுமையிலும், தன் குடும்ப உறுப்பினர்களை கவனித்து வளர்த்து ஆளாக்குவது ஒன்றும் வரலாறு ஆகிவிட முடியாது. கூடவே, அதே கிராம வெள்ளந்தி தனத்துடன், உறவுகளையும் பேணி வளர்ப்பது தான் சிறப்பு. தனக்கே மிகுந்த சிரமங்களுக்கு இடையில் உணவு கிடைக்கும்போது, வேறு வேலையாக அந்த கிராமத்திற்கு வந்த பிறரின் உறவினர்களையும் தன் வீட்டுக்கு அழைத்து விருந்து படைக்கும் குணம் என் அப்பாயிக்கு உண்டு. இவள் காட்டும் பாசத்தில் பல உறவுகள், இவள் வீட்டுக்கு சென்றால் நல்ல உரையாடல்களுடன், உணவும் அருந்திவிட்டு வரலாம் என்று எண்ணுவது உண்டு. இன்றும் அவ்வாறு வருவதும் உண்டு. பொதுவாக பெண்களுக்கு கொஞ்சம் பொறுமை அதிகமாக இருக்கும். இவரின் பொறுமைக்கு அளவு எங்கே இருக்கிறது என்று நான் பலமுறை தேடியதுண்டு.
ஒவ்வொரு பிள்ளையும், தன் தாயின் மேல் கொண்டிருக்கும் பாசம் அளப்பரியது. நான் இவர் மேல் கொண்டிருக்கும் அன்பு என் தாய்க்கு கிடைப்பதை விட அதிகம் என்று என் தாயும் அறிவாள். என் தந்தை படித்து ஒரு நல்ல வேலையில் சேர்ந்த பிறகு வறுமை வெளுத்துவிட்டிருந்தது. என் தந்தைக்கு திருமணம் ஆன பிறகும், அதிகாலையில் 5 மணிக்கு முன்பு எழுந்து வீட்டு வாசல் கூட்டி, சாணம் தெளித்து விட்டு, டீ போட்டுவிட்டு என் தந்தையை, "தம்பி, தம்பீ" எந்திரிப்பா விடிஞ்சிருச்சு என்று எழுப்புவார். இந்தா வாரேன் ஆயா என்று அவரும் எழுந்து சென்று, தாயும் மகனும் டீ குடித்துக் கொண்டே வாழ்வின் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் பற்றி எதார்த்தமாக பேசிக்கொண்டு இருப்பார்கள். நானும் சிறு வயதில் இருந்தே இது போன்ற பேச்சுகளில் அவர்களுடன் பங்கேற்பதுண்டு. என் தந்தைக்கு நான் மூத்த பையன் என்ற கடமையும், பெருமையும் என்னை அவர்கள் கலந்துரையாடலில் விரும்பி என்னை அமர வைத்திருக்கும்.
எங்கள் குடும்பத்தில் ஒவ்வொருவருக்குள்ளும், ஒரு நக்கலும், நையாண்டியும் இருக்கும். வாழ்வின் சீரியஸ் ஆன தருணங்கள் தவிர எங்களுக்கும் கேலி பேச்சுகள் இருக்கும். அனால், எதையும் மனதில் வைத்து கொண்டு எவரின் மீதும் பகை பாராட்டுவதில்லை. அவ்வப்போது என் அப்பா... என் அப்பாயியிடம், "ஆயா, நம்ம ரெண்டு பேரையும் இவனுக எல்லாம் லூசுன்னு தானே நினைச்சிருக்காங்க" என்று சில வேடிக்கையான தருணங்களில் சொல்லி அனைவரயும் நகைப்புக்குள்ளாக்குவார். அப்போதும், சிரித்து கொண்டே, படிச்ச புள்ளைக எப்புடி வேணாலும் வச்சிகிரட்டும் என்று சினத்தை சிந்தையிலிருந்தே விரட்டிவிடுவார். அவர் அதிகம் கோபப்பட்டு நான் பார்த்ததில்லை.
இவர் பல நேரம், எங்களுக்கு பாதுகாப்பாளராகவும், பணிவிடையாளராகவும், தாயாகவும், நல்ல வழிகாட்டியாகவும் இருந்ததுண்டு. எனது உறவினர்களில் பெரும்பாலோர், இவரை தெய்வமாக மதிக்கப் பட வேண்டியவர் என்றும், இவர் கிடைக்க நாங்கள் கொடுத்து வைத்திருக்கவேண்டும் என்று சொல்வர். அதை கேட்கும்போதெல்லாம் என் நெஞ்சம் மகிழ்ச்சியின் எல்லைகளை தொட்டு வருவதுண்டு. பல வீடுகளில், இது போன்ற வயதானவர்களை, "இந்த கிழவி சும்மா இருக்காது... ஏதாவது பேசிக்கொண்டோ, திட்டிக்கொண்டோ இருக்கும். பக்கத்து வீடுகளில் சென்று இல்லாத, பொல்லாததுகளை சொல்லி நம் குடும்ப மானத்தை குறைக்கும்" என்று பேசி நான் கேட்டதுண்டு. சில வயதானவர்கள் அவ்வாறு நடந்து கொள்வதும் உண்டு. ஆனால், என் அப்பாயி, இது போன்ற சங்கட சந்தர்ப்பங்களை எங்களுக்கு தந்தது இல்லை.
சிறிய தலைவலிக்கு கூட சில வயதானவர்கள் கூப்பாடு போடுவதுண்டு..."எனக்கு வியாதி வந்தா மட்டும், இந்த வீட்டுல யாருமே கண்டுக்கிறது இல்ல. எங்குட்டோ செத்து தொலையட்டும்னு தானே எல்லாரும் இப்புடி விட்டுட்டாங்க"-னு பல புலம்பல்கள் கேட்டதுண்டு. என் அப்பாயிக்கு ஏதாவது ஒன்று என்றால், நாங்கள் வைத்தியம் பார்க்க முனையும்போது, "எனக்கு எதுக்குப்பா இதெல்லாம். நான் இனிமே இருந்து என்னா பண்ணப்போறேன். செத்தா தூக்கி போடுங்க அதுபோதும்" என்று மன நிறைவாய் சொல்லிக்கொள்வார். இதுவேண்டும், அதுவேண்டும் என்று எதுவுமே கேட்டதில்லை. அவள் வேண்டாம் என்று கூறியது தான் அதிகம் இருக்கும் உறவுகளைத் தவிர. என் திருமணத்திற்கு பெண் தேடும்போது, என் அப்பாயி போன்ற ஒரு பெண் எனக்கு கிடைக்க வேண்டும் என்று நான் கூறியதை என் உறவுகள் விழிகளை அகல விரித்து தான் பார்த்தார்கள். இது போல இப்போது கிடைக்குமா என்று. எனக்கு கிடைத்தவளும் இதுவரை அவரைப்போல நடந்து கொள்வதில் 75% தேறிவிட்டாள். :-)
எனக்கு ஒரு நீண்ட நாள் ஆவல். என் அப்பாயியை ஒரு முறையேனும் விமானத்தில் ஏற்றி அவரது மகிழ்வை பார்க்க வேண்டும். என் பக்கம் அனைத்தும் தயார். ஆனால், அவர்தான் வழக்கம்போல மறுப்பு தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.
சிறு வகுப்புகளில், ஒரு கதை சொல்வார்கள். "உன் மூதாதையருக்கு எவ்வளவு மரியாதையுடன், எந்த தட்டில் நீ சோறு போடுகிறாயோ, அதே மரியாதையுடன், அது போன்ற ஒரு தட்டில் உனக்கு சோறு கிடைக்கும். உன் பிள்ளை அவன் வாழ்வில் பார்ப்பதை தான் கற்றுக்கொள்வான். அதை தான் செயல்படுத்துவான். எனவே, உன் பெற்றோருக்கோ, மாமனார், மாமியாருக்கு உரிய மரியாதை செலுத்த மறவாதே" என்று குடும்ப பெரியவர்களுக்கு சொல்லி இருப்பார்கள். இன்றும் இது போன்ற வாழ்வியல் பாடங்கள், வகுப்பறைகளில் உயிரோடு இருக்கிறதா என்று தெரியவில்லை.
வழக்கமாகவே குடும்பத்திலிருந்து ஒருவர் வெளி நாடு செல்லும்போது, அந்த வீட்டிலுள்ளவர்கள் கண்கலங்கி அழுது வழியனுப்பி வைப்பார்கள். ஒவ்வொருமுறையும் நான் கிளம்பும்போது என் அப்பாயியும் என்னை கட்டிக்கொண்டு அழுவார்... இதை எழுதும்போது கூட கண்கலங்கி தான் எழுதுகிறேன். அவர் வயதானவர் என்பதால், அவர் அழுகை எனக்கு "இருவரும் மறுமுறை காண்போமா? இல்லை நீ மட்டும் என் உடல் காண்பாயா?" என்ற பாடல் வரிகளை ஏனோ நினைவுக்கு கொண்டு வரும். அவர் இன்னும் நீண்ட காலம் உயிர்வாழ வேண்டும். என் குழந்தைக்கு அவரை சுட்டி காட்டி வாழ்கை கற்றுக்கொடுக்க வேண்டும் என்பது என் ஆசை.
என் அன்பிற்கும், பாசத்திற்கும், பண்பிற்கும், போற்றுதலுக்குமுரிய என் அன்பின் அப்பத்தா, I LOVE YOU SO MUCH.
இதுபோன்ற நற்குணம் படைத்த, அனைத்து பெண்மணிகளுக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்.
56 comments:
அப்பத்தாவுக்கு என்னோட வணக்கங்களைச் சொல்லுங்க. நானும் அப்பத்தா செல்லம் தான். அம்மாவை விடவும் அப்பத்தாவைப் பத்தி அதிகம் நினைக்கிறதுண்டு. நல்ல பதிவு!
அருமையான் உண்மை கதை. தற்காலத்தில் நல்லவர்களை பார்ப்பதே அரிது. அருமை. மிக அருமை.
நன்றி.
பன்னீர்செல்வம்
ஒரு உருக்கமான பதிவு...நல்லா இருக்குது அண்ணே..
மிக அன்பான பதிவு நண்பா...
படித்து நெகிழ்ந்தேன்
மிக நெகிழ்ச்சியான உணர்வு நண்பரே,
அப்பத்தாவுக்கு எனது அன்பும்..
//உன் மூதாதையருக்கு எவ்வளவு மரியாதையுடன், எந்த தட்டில் நீ சோறு போடுகிறாயோ, அதே மரியாதையுடன், அது போன்ற ஒரு தட்டில் உனக்கு சோறு கிடைக்கும். உன் பிள்ளை அவன் வாழ்வில் பார்ப்பதை தான் கற்றுக்கொள்வான். அதை தான் செயல்படுத்துவான். எனவே, உன் பெற்றோருக்கோ, மாமனார், மாமியாருக்கு உரிய மரியாதை செலுத்த மறவாதே//
Golden words ரோஸ்விக்..
அவர்களை வன்புறுத்தியாவது,
சிங்கை அழைத்து வாருங்கள்..
அவருக்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமை இது..
அன்புடன் பட்டாபட்டி
அப்பத்தாவுக்கு என் வணக்கங்களும்,அன்பும்....
நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்
நல்ல பதிவு!
யாராவது ஒருத்தர் நம்மல பாதிச்சிடுறாங்க. நினைவுகளை அசை போடுவதும் தானே வாழ்க்கை.
மிக மிக அருமையான பொக்கிஷமான பதிவு.மூத்தவர்கள்தான் எங்கள் வழிகாட்டிகள்.
என் தாத்தா இருந்தார் இவர்போல.
நினைத்துக்கொள்கிறேன்.
எவ்வளவு அழகா சொல்லிருக்கீங்க?!!
எனக்கு என் அப்பத்தா வீட்டு ஐயா ஞாபகம் வந்துருச்சு ரோஸ்விக்
பெரிய சொத்து இவங்க. படிக்கவே பெருமையா இருக்கு. அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்
இவள் காட்டும் பாசத்தில் பல உறவுகள், இவள் வீட்டுக்கு சென்றால் நல்ல உரையாடல்களுடன், உணவும் அருந்திவிட்டு வரலாம் என்று எண்ணுவது உண்டு. இன்றும் அவ்வாறு வருவதும் உண்டு. பொதுவாக பெண்களுக்கு கொஞ்சம் பொறுமை அதிகமாக இருக்கும். இவரின் பொறுமைக்கு அளவு எங்கே இருக்கிறது என்று நான் பலமுறை தேடியதுண்டு.
..............இந்த வரிகளில், நானும் அவரின் பாச மழையில் நனைந்தது போல நெகிழ்ந்து போனேன். அழகாய் அன்பை நீங்களும், இந்த பதிவின் மூலம் வெளிப்படுத்தி இருக்கீங்க.
மிகவும் நல்ல பதிவு ரோஸ்விக், அற்புதமான பகிர்தல். அப்பத்தாவிற்க்கு எனது வணக்கங்கள். பெரியோரின் ஆசிகள் என்றும் நம்மை வழி நடத்தும். நன்றி.
"அவர் இன்னும் நீண்ட காலம் உயிர்வாழ வேண்டும். என் குழந்தைக்கு அவரை சுட்டி காட்டி வாழ்கை கற்றுக்கொடுக்க வேண்டும் என்பது என் ஆசை.." நல்ல தலைமுறைக்கு உதாரணம் நம் மூதாதையர்கள்... தாயை போல பிள்ளை நூலை போல சேலை ... சும்மா வா சொன்னங்க...! நீங்க மட்டும் அல்ல உங்க குடும்பம்மே திசைகாட்டி தான்...! உருக்கமான 50-வது பதிவுக்கு எங்கள் [ உங்க ஆபதவுடன் ] வாழ்த்துகள் ...!
சிறு வயது முதல் நான் பாட்டி வீட்ல வளர்ந்ததால, அவர்களோட அருமை எனக்கு தெரியும், உங்கள் பதிவை படித்து விட்டு கண் கலங்கிவிட்டேன், அவர்கள் இப்போது உயிருடன் இல்லை.
நீங்கள் என்ன என்ன அவர்களுக்கு செய்யவேண்டி ஆசைபடுகிரிர்களோ(என் அப்பாயியை ஒரு முறையேனும் விமானத்தில் ஏற்றி அவரது மகிழ்வை பார்க்க வேண்டும்.), அதை எல்லாம் தாமதிக்காமல் செய்துவிடுங்கள், பின் வரும் நாட்களில் உங்களுக்கு சந்தோசம் இருக்குதோ இல்லையோ கண்டிப்பாக ஒரு திருப்தி இர்ருக்கும். ச்ச....நான் நினைத்தாலும் இப்போது எதுவும் முடியாது....
தங்களின் அன்புக்கு மிக்க நன்றி நண்பா...
உங்களுக்கு என் நன்றிகள்.
உங்களின் இந்த பின்னூட்டத்திற்கும், என் 50- வது பதிவின் வாழ்த்திற்கும் மிக்க நன்றிகள்.
இதை எழுதும்போது நான் கண்கலங்கிவிட்டேன்.
உங்கள் பாட்டியை நீங்கள் பிரிந்து வாடுவதன் கஷ்டம் எனக்குப் புரிகிறது. நீங்கள் நம் மூதாதையருக்கு இவ்வளவு அன்பு காட்டுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
உங்களுக்கு நல்வாழ்வு அமையும். நன்றிகள் நண்பரே.
தோஸ்த்து உங்களுக்கு டைம் கெடச்சா இத ரவ பட்சி பாரு தல ,
http://athekangal.blogspot.com/2010/02/blog-post_09.html
அப்பால , பதிலு குத்து கீரேன் பா !! ரவ கண்டுக்க !!
நல்ல பதிவு...என்னோட வாழ்த்துக்களும் உங்க அப்பத்தாவுக்கு.
//னக்கே மிகுந்த சிரமங்களுக்கு இடையில் உணவு கிடைக்கும்போது, வேறு வேலையாக அந்த கிராமத்திற்கு வந்த பிறரின் உறவினர்களையும் தன் வீட்டுக்கு அழைத்து விருந்து படைக்கும் குணம் என் அப்பாயிக்கு உண்டு.//
முதல்ல உன்க அப்பாயிக்கு ஒரு சல்யூட்..
//எனக்கு கிடைத்தவளும் இதுவரை அவரைப்போல நடந்து கொள்வதில் 75% தேறிவிட்டாள். :-)//
கொடுத்து வச்சவருங்க நீங்க. உங்க அப்பாயி மேல நீங்க வச்சிருக்குற இந்த பாசத்திற்கும் ஒரு சல்யூட்
அன்புடன் நண்பரே இது போன்ற பதிவு உம்மை பெற்ற அன்னைக்கு ஒரு நமஸ்காரம் இந்த காலத்தில் இது போன்ற பதிவு மிக அவசியம் இதை படித்து ஒரு அன்பர் தானும் இது போல் அனால் அதுதான் உமக்கு பெரிய அவார்ட்..வாழ்த்துக்கள்
எங்கள்' வணக்கங்கள
பெண்களை படைக்கும் போதே இறைவன் , தன்னோட தன்மையை '' தாய்மை '' என்ற குணமாக வைத்து அனுப்பி விடுகிறான் . அதனாலத்தான் நாம் அப்பத்தா, அம்மத்தா, அம்மா , அக்கா, தங்கை , மனைவி , மகள் என்று அவர்களோடு வாழ்த்தபட்டவர்களாக இருக்கிறோம் .
உங்கள் அப்பத்தா அந்த இறைதன்மையான தாய்மை குறையாம இருக்கிறது மிக சிறப்பு.. இதுல நான் பார்த்த மிக மிக சிறப்பு , ஒரு பேரன் அதே பாசத்தோட இருக்கிறது தாங்க .. எழுத, எழுத, உங்களுக்கு கண்ணீர் வருகிறது என்று சொல்லி இருந்தீர்கள் ..படிக்க படிக்க எங்களுக்கும் பனிக்கிறது உங்கள் பாசம் ... அந்த பேரனை உருவாக்கிய அப்பத்தா '' வாழ்க வளமுடன் ''
மனித இருப்பை உறுதி செய்த பதிப்பு இது .
//தலைப்ப மட்டும் "லக்கி லுக்" -னு வச்சிருந்தா ரொம்ப பேரு கண்ணுல உங்க பதிவு பட்டிருக்கும்.. அதுக்கான காரணம் உங்களுக்கு தெரியுமான்னு தெரியல.//
எனக்கும் தெரியும் நண்பரே....
ஆனா,இன்னைக்கு காதல் பத்தின போஸ்டுக்கு தான் மதிப்பு.
அதான்,கொஞ்சம் நம்ம குசும்ப காட்டுனோம்.
:)
//இது எல்லாமே எனக்கு புதுசு... நீங்க வேற ஒரு உலகத்தையும் அறிமுகப் படுத்தி இருக்கீங்க...//
சொன்னதோட நிக்கதிங்க தல...ட்ரை பண்ணி பாருங்க.உங்கள மாதிரி புது ஆளுங்க வந்தா தான் தமிழ்நாட்டுல நசிஞ்சு பொய் இருக்குற காமிக்ஸ் கொஞ்சமாவது தல தூக்க முடியும்.தமிழ்நாட்டுல இத வெளியிட்ரவங்க lion and muthu comics குழுமத்தோர்.ஆசிரியர்-விஜயன்.மனுஷன் translationஅ அப்டியே கண்ல ஒத்திக்கலாம்
நல்ல பதிவு . பொறாமையா இருக்குதுங்க. ஏன்னா எனக்கு பாட்டி தாத்தா என்றால் பயங்கர இஷ்டம் ஆனா அதுனாலேயோ என்னவோ ஒரு பாட்டி தாத்தாவும் கிடையாது.
இப்ப என்னோட வருத்தம் என்னன்னா என்னோட பாப்பாவுக்கும் ஒரே ஒரு தாத்தா தான் இருக்கிறார். அவருக்காக பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறேன் .
உங்கள் அப்பத்தாவுக்கு என்னுடைய வணக்கங்களையும், அன்பையும் பிரார்த்தனையும்...... சொல்லுங்கள்.
வெளியூரு....எங்கயா போன நீயு?கோவில் திருவிழாவுல ஆடு இல்லன்னா நல்லவா இருக்கும்.புது போஸ்ட் போட்டு இருக்கேன்.வந்து பாதுப்புட்டு போ ராசா....
roommate, Ungalukku appayinna enakku ammachi. Yes, Naan appadiye enadhu ammachi madhiriye ella velayum paakkurennu enakku or two three yearsaa thonudhu. Ennai madhiriye neengalum ninaichu irukkadhula enakku kollai santhosham / Perumai. Ulagam romba chinnadhu roommate. Naanum enga ammakitta pona masam pesurappa, ammachiya oru thadavai flightla kootittu pohanum... Appadinnu feel panninen. Neengalum feel panni irukkeenga. Oru varusham room mateaa irundhadhila, ivvalavu wave length othu poradhu appadiye enakku pullarikkudhu roommate.
Endrum ammachiyin anbai thedum,
Sudhakar KR
உங்க பேரு நல்லா இருக்குங்க.
அவுங்க மாதிரி பெரியவங்க தான் நம்ம சொத்துங்க தம்பி. நாம சாப்பிடும் போது வேண்டாம் போதும் என்று சொன்னாலும் அன்னத்தை அள்ளிப் போட்டு நாம திணருவதை வேடிக்கை பார்ப்பாங்க பாருங்க ....நாங்கதான் கொடுத்து வைக்கிலே உங்க ஆயுள் முழுக்க உங்க அப்பத்தா உங்க கூட இருக்க வாழ்திரேன்ங்க.
நானும் எங்க அவ்வா ( பாட்டி ) பற்றி இது போன்ற
ஒரு பதிவு எழுதலாம் என்று இருந்தேன் ..
உங்கள் பதிவை படித்ததும் இப்போது என்னுடயை அவ்வாவை
நினைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறேன் ....
சென்ற செவ்வாய் கிழமைதான் அவங்களோட
13 -ஆவது நினைவு தினம் ......
--------------
உங்களது பாசமுள்ள நெஞ்சத்திற்கும் உங்கள் பாட்டிக்கும்
எனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள் ........
---
அருண்
ரோஸ்விக் உங்கள் அப்பத்தா மீது நீங்கள் வைத்து இருக்கும் அன்பு அளப்பரியது தான்! பெரியவங்க மீது நீங்கள் அன்பு வைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.. பெரியவங்களை மதிக்கிரவங்க எல்லோரோட உணர்வுக்கும் மதிப்பு கொடுப்பாங்க என்பது என் தனிப்பட்ட கருத்து. ரொம்ப இல்லைனாலும் மற்றவர்களை ஒப்பிடும் போதாவது,
Post a Comment