பெண் குழந்தை
மரபுக்கவிதையாக - ஒரு
புதுக்கவிதை வேண்டுமென்ற
மனைவிக்கு....
பெண் குழந்தை!
தொலைபேசி
நாங்கள் எதுவும்
பேசுவதில்லை - ஆனால்
எங்கள் பெயர் மட்டும்
தொலைபேசி...
மழலை
எழுதவும் தெரியாது
படிக்கவும் தெரியாது - நீ
எழுதுகிறாய் . . .
ஓராயிரம் ஹைக்கூ !
மழலையின் பேச்சுக்கள்
ஊடல் கூடல்
மறக்க நினைத்த பொழுதுகளும்
மறைந்து நினைத்த பொழுதுகளும் - என்
மனதில் ஊசலாடிக் கொண்டிருகின்றன...
நம் ஊடலும் கூடலும்!
செயற்கைக்கோள்
உலகிலேயே அதிக
நீலப்படம் எடுத்தவருக்கு
வானுயரத்தில் வாழ்வு!
செயற்கைக்கோள்....
27 comments:
அருமை....:))
//நாங்கள் எதுவும்
பேசுவதில்லை - ஆனால்
எங்கள் பெயர் மட்டும்
தொலைபேசி.//
அருமை நண்பரே...தொலைபேசிக்கு இப்படி ஒரு பேச்சு.....
அருமையான கவிதைகள். ஒரு விண்ணப்பம் ரோஸ்விக். எஃப்.எம். ரேடியோ திடீரென அலறி டரியலாக்குகிறது. ஆட்டோ ப்ளே ஆப்ஷன் நீக்க முடியுமா பாருங்களேன்.
நாங்கள் எதுவும்
பேசுவதில்லை - ஆனால்
எங்கள் பெயர் மட்டும்
தொலைபேசி...
உலகிலேயே அதிக
நீலப்படம் எடுத்தவருக்கு
வானுயரத்தில் வாழ்வு!
செயற்கைக்கோள்....
//
இரு கவிதைகளும் அற்புதம்
கவிதைகள் எல்லாமே அருமை . அப்பப்ப இது மாதிரி போடுங்க.
ரேகா ராகவன்
எளிமையான கவிதைகள்.வெகுவாய் ரசித்தேன்..
எனக்கு இலக்கண கவிதைகள் புரியாது.
Arumai. Niraya Kavidhaigal Ezhudhungal
இவ்ளோ நாளா உங்களை படிக்காம மிஸ் பண்ணிட்டேனே பாஸ்..
பிரம்...மா..தம் பாஸ். பெண் குழந்தைகள் மரபாகிப் போன கவிதைகள். கவிதைகள் படைக்கும் கவிதைகள். ஊடல் கூடல் அனுபவ வரிகள். தொலைபேசி...இதுபோல நிறைய சம்பந்தம் இல்லாப் பெயர்கள் அமைகின்றன.
அருமையான கவிதைகள். ரசிக்க வைத்தன.. வாழ்த்துக்கள்
அருமையான கவிதைகள். ரசிக்க வைத்தன.. வாழ்த்துக்கள்
புலவன் புலிகேசி - வாங்க புலவா! வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றி :-)
வானம்பாடிகள் - வாங்க பாலாஜி அண்ணேன்! (சார்-னு சொல்லக்கூடாது) வருகைக்கு மிக்க நன்றி. தங்களின் அன்பிர்க்கிணங்க அந்த டரியலாக்கும் வானொலியின் ஆட்டோ ப்ளே நிறுத்தப்பட்டது. :-)
வெண்ணிற இரவுகள் - வாங்க வெண்ணிரவு! தங்களின் வருகைக்கும் ரசனைக்கும் நன்றி. :-)
ரேகா ராகவன் - வாங்க ரேகா ராகவன்! கண்டிப்பா எழுதிடுவோம். தொடர்ந்து வருக. மிக்க நன்றி :-)
Thirumalai Kandasami - வாங்க நண்பரே! உங்கள் கருத்து தான் எனக்கும், கவிதை ரொம்ப எளிதாக புரியவேண்டும். ஆனால், எனக்கே சில சமயங்களில் எளிதான வரிகள் வராமல் போய்விடுகிறது. கவிதை வாசிப்பதை விட எப்போதும் வாசிக்கக் கேட்பது எளிதில் புரியும். :-)
வீரன்(Veeran)- வாங்க வீரன்! தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.
அனானி நண்பருக்கு! நன்றி. தங்களின் ஆதரவில் எழுதிடுவோம்.
பிரியமுடன்...வசந்த் - வாங்க வசந்த்...ரொம்ப பிரியமுடன் வந்துருக்கீங்க...உங்க ப்ளாக் நான் அடிக்கடி வந்து போற இடம் தான். என்ன பின்னூட்டம் ஏற்கனவே ரொம்ப உங்களுக்கு :-) சரி நம்மளும் போட்டு தலைவரை கஷ்டப்படுத்த வேண்டாம்னு பல சமயம் வந்துடுவேன். ஒரு ஒட்டு மட்டும் போட்டுட்டு. :-)
ஸ்ரீராம் - தொடர் வருகைக்கு நன்றி ஸ்ரீராம். நல்ல ரசிச்சிருக்கீங்க போல. :-))
ஈ ரா - வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிகள் ஈ ரா.
ரோஸ்விக் உள்குத்து கவிதைகள் என்ற தலைப்பு என்பது எனது கவுஜை தொகுப்பின் தலைப்பு. அதைச்சுட்டதற்கு உங்களுக்கு கோர்ட் நோட்டிஸ் வரலாம்.
ஆனா பாருங்க அந்த தலைப்புக்கு உங்க கவிதைகள்தான் கரக்டா இருக்கு. எல்லா கவிதைகளும் சூப்பர்.
ரோஸ்விக் உள்குத்து கவிதைகள் என்ற தலைப்பு என்பது எனது கவுஜை தொகுப்பின் தலைப்பு. அதைச்சுட்டதற்கு உங்களுக்கு கோர்ட் நோட்டிஸ் வரலாம்.
ஆனா பாருங்க அந்த தலைப்புக்கு உங்க கவிதைகள்தான் கரக்டா இருக்கு. எல்லா கவிதைகளும் சூப்பர்.
அனைத்தும் அருமை
எல்லாமே நல்லா இருக்கு நண்பா, அட சொல்ல வைக்கும் விதமாக இருக்கிறது. வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள், தொடர்ந்து படிக்கிறேன், :-)
விக்டர் கவிதைகள் எளிமை.. புரியற மாதிரி கவிதை எழுதியமைக்கு நன்றி ;-)
வருகைக்கு நன்றி நண்பா!
ஐ, ஐய்....உங்க கோர்ட் நோட்டீஸ் செல்லாதே....என்னோட முதல் உள்குத்து கவிதை oct 15-ம் தேதி வெளி வந்திருக்கு....உங்களோட முதல் உள்குத்து கவுஜை Oct 17 -ம் தேதி தான் வந்திருக்கு..அதனால, இப்ப நான் தான் உங்களுக்கு கோர்ட் நோட்டீஸ் அனுப்பப்போறேன்...
பிரச்சனைய எளிதா முடிக்கனும்னா, சூட்கேசுல நான் சொல்ற அளவு பணத்தை எடுத்துக்கிட்டு துப்பாக்கி எடுக்காம, ஊருக்கு மேற்கே இருக்குற ஆளு இல்லாத பங்களாவுக்கு வாங்க...:-))
ஆ.ஞானசேகரன் - வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே!
முரளிகுமார் பத்மநாபன் - வருகைக்கு நன்றி M.K.P! (பேரு பெரிசா இருக்கு அதான்). தொடர்ந்து எழுதிடுவோம்....அடிக்கடி வாங்க.
கிரி - அப்பாடா .....நம்மளும் புரியிற மாதிரி எழுதிட்டோம் :-)...ரொம்ப நன்றி கிரி....கவிதைய பார்த்து இனிமேல் டரியல் ஆகமாட்டீர்கள் தானே.?
//உலகிலேயே அதிக
நீலப்படம் எடுத்தவருக்கு
வானுயரத்தில் வாழ்வு!
செயற்கைக்கோள்....//
ஐயா சாமி நீங்க இங்க இருக்கவேண்டிய ஆளே இல்ல..
சத்தமா சொல்லாதீங்க...எங்க டேமஜருக்கு தெரிஞ்சா திரும்ப offshore-க்கு போகச் சொல்லிடுவாரு.....:-)
மிக நன்றி சங்கர்.
கலக்கல்..!
அருமையான கவிதைகள்!நீங்கள் சிவகங்கையா?...
rajaram.b.krishnan@gmail.com-மின் முகவரி.
பா.ராஜாராம் - மிக்க நன்றி நண்பரே! தங்களை மின் அஞ்சலில் தொடர்புகொள்கிறேன். :-)
அருமை... மூன்றாவது அழகு
vidyaasamana karpanaikal..nanbaa..!!
Unable to hear songs..Please check..
Post a Comment