Saturday, November 7, 2009

தெரிந்துகொள்வோம் - 4

உலகில் உள்ள விஷ மரங்களில் இந்தோனேசியாவில் உள்ள 'உபர்ஸ்' மரம்தான் அதிக விஷமானது.

ஒவ்வொரு முழு நிலவுக்கும் இடைப்பட்ட காலம் 291/2 நாட்கள்

புகழ்பெற்ற ஈஃபில் டவரின் பிளானை வரைய ஆறாயிரம் சதுர கஜம் காகிதம் தேவைப்பட்டதாம்.

உலகில் மிக அகலமான பாலம் சிட்னி ஹார்பர் பாலம்.








உலகில் அடிக்கடி பூகம்பம் ஏற்படும் நாடு ஜப்பான் அல்ல; மெக்சிகோ

நண்டுக்கு ஐந்து ஜோடி கால்கள் உண்டு. செவுல்களால்தான் அது மூச்சுவிடும்.

வைக்கோலால் ஆன தொப்பிகளை ஈக்வடாரில் அதிகம் பயன்படுத்துகிறார்கள்

இந்தியாவில் அதிகம் பயிராகும் மிளகாய் ரகம் - ஹங்கேரியன் 'பாப்ரிகா'


இந்தியாவில் மலை ஏறுவதற்கான கிளப்புகள் அதிக அளவில் மேற்கு வங்க மாநிலத்தில்தான் உள்ளன.

சுறா மீனை ஜப்பானியர்கள் 'கடல் தங்கம்' என்று அழைக்கிறார்கள்

'சிரிப்' என்ற பறவை நீர்ப்பரப்பின் மேல் தன் கூட்டைக் கட்டுகிறது.

முதல் உலகப் போர் 1914 முதல் 1918 வரை.

இரண்டாம் உலகப் போர் 1939 முதல் 1945 வரை.

இரண்டாம் உலகப் போருக்குப்பின் 1945-ம் ஆண்டு 'உலக ஐக்கிய நாடுகள் சபை' அமைக்கப்பட்டது.

பழந்தமிழர் காலம் சுமார் கி.மு.10,000 ஆண்டில் தொடங்குவதாக கூறப்படுகிறது.

லட்சத்தீவில் மொத்தமுள்ள 36 தீவுகளில் 11 மட்டும் மக்கள் வசிக்கிறார்கள்.

இறந்து போனவர்களின் உடலை பதம் செய்து காப்பாற்றுவதற்கு பெயர் 'எம்பாம்'.

'இம்பாலா' என்ற மான் ஒரே தாவலில் 8 அடி உயரம் துள்ளி 25 அடி தூரம் பாயும்.


அமெரிக்காவில் ஹெலிகாப்டர்களை டாக்சிகளாக பயன்படுத்துகிறார்கள். இதை 'சாப்பர்ஸ்' என்று அழைக்கிறார்கள்.

தலைவலிகளில் 47 விதங்கள் இருக்கின்றன.

மனித சிந்தனையின் வேகம் மணிக்கு 150 மைல் செயல்படுகிறதாம்.

'செரியம்' எனப்படும் பொருளை நகத்தால் கீறினாலே தீப்பற்றிக் கொள்ளும்.

கழுகு பறக்கும்போது அதன் கால்களும், தலையும் கீழ் நோக்கியே இருக்கும்.

உலகில் மிகுதியான மக்களால் பயன்படுத்தப்படுவது ரோமன் எழுத்துக்கள்தான்.

வெயில் 150 டிகிரிக்கும் மேலாக அடித்தால்தான் ஒட்டகத்திற்கு வியர்க்கும்.





13 comments:

Thamira said...

மாற்றுக்கருத்து இருப்பின் ஸாரி ரோஸ்விக். உங்களைப்பற்றிய ஒரு மாற்றுக்கருத்தைப் என் பதிவில் பதிவுசெய்துள்ளேன். பதிவுக்கு வரவும்.

ரோஸ்விக் said...

தங்களின் மாற்றுகருத்தை வரவேற்கிறேன். அதில் எவ்வித வருத்தமும் இல்லை. நன்றிகள்.

vasu balaji said...

எல்லாமே தெரியாத தகவல். எனக்குச் சொன்னேன் எனக்குச் சொன்னேன். நன்றி.

பின்னூட்டத்தில் இரண்டு கண்ணியவான்களைப் பார்க்க முடிகிறது. பாராட்டுக்கள் ஆதி, ரோஸ்விக்.

எம்.எம்.அப்துல்லா said...

//பின்னூட்டத்தில் இரண்டு கண்ணியவான்களைப் பார்க்க முடிகிறது. பாராட்டுக்கள் ஆதி, ரோஸ்விக்.

//

அதே அதே :)

தொடருங்கள் இப்பண்பை.

ஸ்ரீராம். said...

நல்ல தகவல்கள்.

சிவாஜி சங்கர் said...

//வெயில் 150 டிகிரிக்கும் மேலாக அடித்தால்தான் ஒட்டகத்திற்கு வியர்க்கும்.//
ஆத்தாடி...25ºலேய வேர்க்குது பாஸ்..

க.பாலாசி said...

//உலகில் அடிக்கடி பூகம்பம் ஏற்படும் நாடு ஜப்பான் அல்ல; மெக்சிகோ//

அறிய தகவல்கள்...

பகிர்வுக்கு நன்றி அன்பரே....

ரோஸ்விக் said...

வானம்பாடிகள் - வடிவேலு சொல்வதுபோல் இருக்கிறது தலைவா...மிக்க நன்றி.


வானம்பாடிகள் & எம்.எம்.அப்துல்லா - எல்லோருக்கும் நமது கருத்து / நடை பிடித்து போகவேண்டும் என்றோ, நம் எழுத்தை படிப்பவருக்கு எதிர் உணர்வுகளே வரக்கூடாது என்றோ எதிர் பார்ப்பது நியாயம் இல்லை தானே. :-)

மிக்க நன்றி.


ஸ்ரீராம். - மிக்க நன்றி நண்பரே!


Sivaji Sankar - மிக்க நன்றி நண்பரே!
ஆமாங்க...எதிர்காலத்துல நமக்கும் ஒட்டகத்தோல் போல தோல் இருந்தாத்தான் தாங்கும் போல. :-)


க.பாலாசி - வாங்க நண்பா...மிக்க நன்றி.

Prathap Kumar S. said...

ரோஸ்விக் எல்லாமே தெரியாத விசயங்கள்தான் தெரிந்து கொண்டேன்.

உங்களின் மாற்றுக்கருத்தை வரவேற்கும்குணம் வரவேற்க்கதக்கது. அது பிடிக்காதவர்கள் என்னைக்கேட்டால் பதிவெழுதவே வரக்கூடாது...சரிதானே...

ரோஸ்விக் said...

மிக்க நன்றி நண்பா. சரி தான். :-)

ஆ.ஞானசேகரன் said...

நல்ல தொகுப்பு நண்பா,..

ரோஸ்விக் said...

ஆ.ஞானசேகரன் - வாங்க நண்பா...மிக்க நன்றி

கோவி.கண்ணன் said...

தகவல்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது