Saturday, November 21, 2009

கிரியேட்டிவ் மூளைகள் - 1

நம்ம ஆளுங்ககிட்ட படைப்பாற்றல் / ஆக்கும் திறனுக்கு குறைவில்லங்க...ஒரு சின்ன சந்து கிடச்சா போதும்...கலக்கீடுவாங்க. நான் படிக்கும்போது எனது பள்ளி, கல்லூரியில் நடந்த கலைவிழாக்களில் எம் நண்பர்கள் அரங்கேற்றிய சில படைப்பாற்றல உங்களோட பகிர்ந்துக்கிறேன். கீழ் வருபவையெல்லாம் விளம்பர நிகழ்ச்சியாக நடித்து காட்டப்பட்டது.

1 ) பனியன் - ஜட்டி விளம்பரம்

நண்பன் ஒருத்தன் விளம்பர தொனியில சத்தமா, "ஆனந்த் பனியன்கள் - ஜட்டிகள். அணிய அணிய சுகம்.... ஏழு வண்ணங்களில்....மென்மையிலும் மென்மையாக......அணிந்து மகிழுங்கள் ஆனந்த் பனியன்கள் - ஜட்டிகள்..." -னு விளம்பரப்படுத்திகிட்டு இருந்தான்.

உடனே இன்னொரு நண்பன்: ஆமா மச்சி, ஆனந்த் யாரு உன் ரூம் மேட்டா? அப்படின்னு கேட்க...கூட்டத்தின் சிரிப்பலை அடங்க வெகு நேரம் ஆகிவிட்டது.


2 ) சொட்டு நீலம் விளம்பரம்

இது பள்ளியில் படிக்கும்போது நடந்தது...ஒரு 11 -ம் வகுப்பு நண்பர் ஒருவர், ஒரு வாளியில தண்ணிய வச்சிக்கிட்டு, ஒரு கையில ஒரு சொட்டு நீலம் போத்தலும், மற்றொரு கையில ஒரு பனியனும் வச்சிக்கிட்டு விளம்பரப் படுத்த ஆரம்பிச்சாரு....

"எங்க கம்பெனியோட சொட்டு நீலம் வாங்குங்க....பக்கெட்டுக்கு பத்து சொட்டு போதும். உங்கள் துணிகளெல்லாம் பளிச்சிடும். இதுல இன்னுமொரு சிறப்பு என்னான்னா...சொட்டு நீலத்தை ஒரு பக்கெட்டு தண்ணில கலந்து பிராவைப் போட்டீங்கன்னா....ஜட்டி வரும். ஜட்டிய போட்டீங்கன்னா...பிரா வரும்...." அப்படின்னு சொன்னபடி கையில வச்சிருந்த பனியனை வாளிக்குள்ள போட்டுட்டு..வாளிக்குள்ள ஏற்கனவே யாருக்கும் தெரியாம போட்டு வச்சிருந்த ஜட்டிய தூக்கி காமிச்சாரு...திரும்ப ஜட்டிய வாளிக்குள்ள போட்டுட்டு...பனியனை எடுத்தாரு.... இப்படியே ரெண்டு மூணு தடவை செஞ்சு காமிச்சாரு பாருங்க....எல்லோரும் அசந்து போய்ட்டாங்க...(அது வெறும் ஆம்புள புள்ளைங்க படிக்கிற பள்ளிக்கூடம் அதனால பனியனை பிரா-னு சொல்லி அமர்க்களப் படுத்தீட்டாரு...)




15 comments:

ஆ.ஞானசேகரன் said...

முன்பே கெட்டதுதான்... இருந்தாலும் ஓகே நண்பா

vasu balaji said...

:)). நல்லாருக்கு

பித்தனின் வாக்கு said...

நல்லா இருக்கு. நல்லா இரசித்தேன், சிரித்தேன். வாழ்த்துக்கள். நன்றி ரேஸ்விக்.

டவுசர் பாண்டி said...

சோக்கா கீதுபா !! மேட்டரு இன்னாமோ போ !! காலேஜி லைப்பு தூள் டக்கரு தாம்பா !! இன்னா மேரி குஜாலா இருக்கும் !!

அல்லாம் இப்ப நெனச்சி பாக்க தன முடியும் தல !! பதிவு சூப்பர் ஒட்டு கூட போட்டாச்சி !!

Nan said...

super Chair..... College ninavugalai thirumba kondu vandhuvitteergal...

ஹேமா said...

இதுதான் கிரியேட்டிவ் மூளைகளா !

கருப்பு பூனை said...

நல்ல பதிவு, இப்பதிவு என்னை எனது கல்லூரி காலத்துக்கு திரும்ப அழைத்து சென்றது...

கிரி said...

முதல் காமெடி நல்லா இருக்கு :-) டைமிங்

ஊடகன் said...

இது எல்லோருக்கும் நடந்த நிகழ்வு தான்........... ஆனால் முதல் இடுகை.........

ஈ ரா said...

--)

ரோஸ்விக் said...

1) ஆ.ஞானசேகரன் - மிக்க நன்றி நண்பரே!

2) வானம்பாடிகள் - மிக்க நன்றி தலைவா!

3) பித்தனின் வாக்கு - தலைவா! மிக்க நன்றி.

4) டவுசர் பாண்டி - மிக்க நன்றி நண்பரே!

5) Nan - மிக்க நன்றி நண்பரே! யேய் யாருப்பா அது?? மின்னஞ்சலில் தொடர்புகொண்டால் சந்தோசப் படுவேன்... யார் இந்த அன்பு நெஞ்சம்??

6) ஹேமா - மிக்க நன்றி தோழி! அப்ப இது கிரியேட்டிவ் இல்லையா?? :-)) இல்லையினாலும் இப்படி கிரியேட்டிவா தலைப்பு வைக்கனும்ல.

7) கருப்பு பூனை - நன்றி நண்பரே! கல்லூரி வாழ்க்கை மிக இனிமையானதுதான்... நீங்களும் உங்க அனுபவத்தை பகிர்ந்துக்கங்க நண்பா!

8) கிரி - நன்றி கிரி!


9) ஊடகன் - நன்றி நண்பரே! நீங்களும் உங்க அனுபவத்தை பகிர்ந்துக்கங்க...:-)

10) ஈ ரா - நன்றி ஐயா! :-)

ஸ்ரீராம். said...

மயக்கம் போட்டு விழுந்த ந(ண்)பரை எழுப்பக் அருகில் ஒன்றும் இல்லாத நிலையில் கையை வைத்து விசிறி விட்டு அவர் சொன்னது..."கைதான் Fan (Kaithaan Fan)..

சிவாஜி சங்கர் said...

சார் account la ஒரு சோடா..

முனைவர் இரா.குணசீலன் said...

நன்றாகவுள்ளது நண்பரே..

ரோஸ்விக் said...

ஸ்ரீராம் - நண்பா! ஆகா...அடுத்த பதிவுல சொல்லலாம்னு இருந்தேன்...போட்டு உடைச்சிட்டீங்க....:-) நீங்க சொன்னா என்ன...நான் சொன்னா என்ன...
மிக்க நன்றி.

Sivaji Sankar - நண்பா இன்னொரு சோடா சேர்த்து சொல்லுங்க ரொம்ப மயக்கமா இருக்கு....அடிக்கடி கண்ணை கட்டுது...:-) மிக்க நன்றி.


முனைவர்.இரா.குணசீலன் - வாங்க தமிழய்யா. தங்களின் வருகைக்கு மிக்க நன்றி. உங்கள் முகம் நான் கல்லல் பகுதியில் பார்த்த முகம் போல் உள்ளது. :-)