Thursday, October 22, 2009

உள்குத்து கவிதைகள் - 2




காதல் - கண்

கண் இல்லாத
காதலுக்கு
எத்தனையோ
காதலிகள்
தயார் - ஆனால்
கண்ணே
இல்லாத
காதலிக்கு
எத்தனை
காதல்கள்
தயார்?...







இன்றைய இதயங்கள்


இரண்டு ஒலிகள் - என்
இதயத்திலே
....
லப்
- ஒருவனுக்கு / ஒருத்திக்கு
டப்
- ஒருவனுக்கு / ஒருத்திக்கு







அம்மண சிலைகள்

அம்மணமாய் இருப்பதோ நாங்கள்
அவமானப்பட்டுக்

கொள்வதோ நீங்கள் - எங்கள்
இச்சைகள்
இறந்துவிட்டன - ஆனால்
இம்சைகள்
மட்டும் மீண்டும் மீண்டும்
ரசனைகளின்
பேரில் உங்கள் கைகளால்.....


லேகியம் விற்பன்னர்

வாலிப, வயோதிக அன்பர்களே!
உங்களுக்கு
ஆண்மை குறைவா?
ஆம்பிளையா
என்ற சந்தேகமா? - நான்
லேகியம்
விற்கிறேன்...
என்
மனைவி - எனை
நாலு
காசு சம்பாதிக்க
துப்பில்லாத
- நீயெல்லாம்
ஆம்பிளையா
எனக் கேட்டதால்....






9 comments:

அன்புடன் நான் said...

என்னை கவர்ந்தது முதல் மூன்றும்....வாழ்த்துக்கள்

Bavan said...

ரொம்ப நல்ல சிந்தனைகள், அருமை நண்பரே......:)

vasu balaji said...

இது உள்குத்து இல்லை. கும்மாங்குத்து கவிதைகள். சூப்பர்.

புலவன் புலிகேசி said...

//இரண்டு ஒலிகள் - என்
இதயத்திலே....
லப் - ஒருவனுக்கு / ஒருத்திக்கு
டப் - ஒருவனுக்கு / ஒருத்திக்கு//

இக்கால காதல் (காமம்)..நல்லா இருக்கு..

க.பாலாசி said...

//அம்மணமாய் இருப்பதோ நாங்கள்
அவமானப்பட்டுக்
கொள்வதோ நீங்கள் - எங்கள்
இச்சைகள் இறந்துவிட்டன - ஆனால்
இம்சைகள் மட்டும் மீண்டும் மீண்டும்
ரசனைகளின் பேரில் உங்கள் கைகளால்.....//

மிகச்சரியான குத்து.....

கடைசியில சொன்னது உண்மைங்களா?

எல்லாம் அருமை...

ஸ்ரீராம். said...

"கண் இல்லாத
காதலுக்கு எத்தனையோ
காதலிகள் தயார் - ஆனால்
கண்ணே இல்லாத
காதலிக்கு எத்தனை
காதல்கள் தயார்?.."

ஆனால் இப்போது பெண்ணே இல்லாத காதலுக்கு இந்தியா(வும்) தயார்!

ரோஸ்விக் said...

1 சி. கருணாகரசு - வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும், பின்னூடத்திற்கும் நன்றிகள். உங்கள் கவிதைகளையும் வாசிக்கும் வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி. மிகவும் அருமையான வரிகள் அனைவருக்கும் புரியும் வகையில்...

வாழ்த்துக்கள் நண்பரே.


2 Bavan -
வருகைக்கும், பின்னூடத்திற்கும் நன்றிகள் நண்பரே!. மிகச் சிறு வயதில் எழுத வந்திருப்பதிலிருந்து உங்களின் எழுத்து ஆர்வம் புரிகிறது. வாழ்வு சிறக்க வாழ்த்துக்கள். பல வெற்றிகள் பெற்று சிறப்பாக வாழ்க.



3 வானம்பாடிகள் -
வாங்க பாலாஜி சார். மிக்க நன்றி. :-)
சும்மா குத்து மதிப்பா பேரு வைக்கிரதுனால, நம்ம குத்துக்கு மதிப்பு தெரிய மாட்டங்குது.
என்ன செய்ய எதாவது இப்படி பேரு வச்சாதான் பல தலைகள் இந்தப் பக்கம் வருது....
(கும்மாங்)குத்துக்கு ஒரு மதிப்பு இருக்கத்தான் செய்யுது...


4 புலவன் புலிகேசி -
வாங்க புலவா! வருகைக்கு நன்றிகள். புது profile photo போட்டு கலக்குறீங்க....சூப்பர் நண்பா. உங்க பழைய போட்டோ இந்த புது போட்டோ கம்பியுடருக்குள்ள இருக்கு...ம்ம்ம்


5 க.பாலாசி -
தல வருகைக்கும், பின்னூடத்திற்கும் நன்றி. கடைசி கவிதையில "நான்" லேகியம் விக்கிறவன் இல்ல....:-) அப்படி லேகியம் விக்கிறவரு...இதுக்காகத்தான் லேகியம் விக்கிராறானு தெரியல...மொத்தத்துல இது ஒரு கற்பனைக்குத்து தான்....

6 ஸ்ரீராம் -
வாங்க பங்காளி வருகைக்கு நன்றி. நம்ம ஊருல அப்புடியெல்லாம் நடத்துறாங்களா? ஒ இப்ப சட்டப்பூர்வமா பிரச்சனை இல்லையோ....என்னமோ போங்க...

Thirumalai Kandasami said...

Kavithaikalai rasithen..

Prathap Kumar S. said...

என்னை கவர்ந்தது முதல் மூன்றும்....வாழ்த்துக்கள்//

ரிப்பீட்டே...