Monday, June 7, 2010

களவாணித்தனமா கல்வி விற்போம் / வாங்குவோம் வாங்க...

நம்ம நாட்டுல தான் வாழ்க்கையையும், உடல் நலத்தையும் சீர்குழைக்கும் மதுக்கடையை அரசு ஏற்று நடத்துது. வாழ்க்கைத் தரத்தை உயர்த்த தேவையான கல்வியை மதுக்காய்ச்சியவர்கள்(ளும்) விற்கிறார்கள் அப்படின்னு நாம சொல்லி நம்மளே நம்ம தலையை சொறிஞ்சு சிரிச்சுக்கிட்டு போயிடுவோம். வேற என்னா பண்றது... நம்மளால முடிஞ்சது அதுதான் அப்படின்னு நம்ம கையாலாகாத தனத்தை நாமளே மெச்சிக்கிட்டு போயிடுவோம்.

ஒவ்வொருத்தருக்கும் நமது பிள்ளைகள் எதிர்காலத்துல நிறைய ச(ம்பா)திக்கனும்னு நினைக்கிறதுல தப்பே இல்லை. அது பேராசை-னு சொல்ல யாருக்கும் மனசு வராது. இதை சாதகமா தனியார் கல்வி வியாபாரிகள் பயன்படுத்திக்கிட்டாங்க. மிகச்சிலரைத் தவிர மற்றவங்க யாரும் இதை சேவையாக பண்ணுவது கிடையாது. இதில் வரும் இலாபங்களைக் கணக்கில் கொண்டே, இதற்கான உரிமம் பெறுவதற்கு கோடி கோடியாகக் கொட்டியும், தேவைப்பட்ட அளவு கூட்டியும் (பணத்தை) நமது அரசியல்வியாதிகள் மற்றும், சம்பத்தப்பட்ட அரசு (சர்வா)அதிகாரிகளுக்கு கொடுத்து வருகின்றனர்.

வியாபாராத்துல ஒரு யுக்தி உண்டு. கொஞ்சம் தரம் குறைவான ஒரு பொருளையும், கொஞ்சம் தரம் கூடிய பொருளையும் வைத்துக்கொண்டு, இரண்டிற்கும் உற்பத்தி செலவு மிகுந்த வித்தியாசம் இல்லாதிருப்பினும், அந்த தரம் கூடிய பொருளை மிக மிக விலை வித்தியாசத்துடன் விற்பார்கள். அதே யுக்தி கல்வி வியாபாரமாகிவிட்ட இந்த காலத்தில் பயன்படுத்தப்படுகிறதே என்ற வருத்தம் நம்மில் பெரும்பாலானோர்க்கு உண்டு.

வீட்டுக்கு வாங்குற பூட்டுல இருந்து, விருப்பத்துக்கு வாங்குற ஆடைகள் வரை Branded பார்க்கும் நம் மக்களின் மனநிலைக்கு, தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை குறித்த பயம் இருப்பதில் நாம் அதிர்ச்சி அடைய முடியாது. அடையவும் கூடாது.  இந்த விருப்பத்தை வியாபாரமாக்கி கொள்ளை லாபத்தில் சுகபோக வாழ்வில் குளிர்காயும் குள்ள நரிகளுக்கு தூபம் அனைத்து ஆட்சிகளிலும் போடப்படுவது கண்டனத்துக்குரியதே. இதில் கண்டிக்கவும், தண்டிக்கவும் பட வேண்டியவர்கள் தனது ஆசிரியர் பணியை கடமையாகச் செய்யாமல், கடமைக்காகச் செய்யும் ஆசிரியர்கள் மற்றும் மாற்றுச் சிந்தனைகளை செயல்படுத்த முயலாமல் / முடியாமல், பெரும் பதவிகளில் பகட்டாகத் திரியும் அதிகாரிகளும் தான்.

பல அரசுப் பள்ளிகளில், மாணவர்களுக்கும், ஆசிரியர்கள் உட்பட அங்கு பணிபுரியும் அலுவலர்களுக்கும் போதிய அடிப்படைத் தேவைகளை செய்து தராமல் இருப்பதற்கு யாரும் பொறுப்பேற்றுக் கொள்ளாமல் ”எனக்கென்ன வந்தது” என்று பல காரணங்களை உருவாக்கிக் கொண்டும், காரணமே இல்லாமல் தவிர்த்துக் கொண்டும் வருபவர்களுக்கு நாம் என்ன பெயர் சூட்டலாம்? எப்படி அவர்கள் தலையில் குட்டலாம்? அதே நேரம் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத அந்த இடங்களில், யாரும் பின் நின்று தங்களை கண்காணிக்கவும், மேய்க்கவும் தேவையற்று சிறப்பாக செயல்பட்டு வரும் ஆசிரியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் என்னோடு ஒத்த கருத்துள்ள நண்பர்கள் சார்பாக சிரம் தாழ்ந்த வணக்கங்கள். 

தம் பணியை மறந்தவர்கள் கொஞ்சமேனும் சுரணையோடு இருங்களேன். உங்களிடம் அல்லது உங்கள் ஆளுகையின் கீழ்வரும் பள்ளியில் உங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்க உங்களுக்கு மனம் வராததற்கு காரணம் நீங்களும் தான் என்பதில் என்றேனும் வெட்கப்பட்டிருக்கிறீர்களா? கலைத்துறை என்ற பெயரில் திரை விலகும் முன்னே ஆடை விலக்கி நல்லவளாக நடிக்கும் நடிகைக்கு உள்ள அங்கீகாரம் நல்லாசிரியர்களுக்கு கொடுக்காததற்கு சம்பந்தப்பட்டவர்களின் பதில் என்ன? தமிழில் என்ன கருமாந்திரத்தையாவது பெயராக வைத்துவிட்டு கழிசடைகளை எங்களுக்கு கற்பிக்கும் கழிவறை சினிமாக்களுக்கு கொடுக்கும் வரிவிலக்கை ஏன் எமது அரசு நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு கொடுக்க என்றுமே முன் வருவதில்லை. அங்கீகாரம் செய்யப்படவேண்டும் தானே?

நல்ல கல்வியை அனைவருக்கும் தந்துவிட்டால், எங்கே எல்லோரும் விழித்துக் கொள்வார்கள் என்ற உங்களின் அச்சத்தை வெளிப்படையாக உங்களால் ஒத்துக்கொள்ள முடியுமா? இந்த கல்வி வியாபாராத்தை ஆங்காங்கே, சிறுசிறு போராட்டங்கள் மூலம் தெரிவித்த பெற்றோர்களுக்கு நமது அரசும், அரசு அதிகாரிகளும் வாக்கு எனும் பேரில் கொடுப்பது பேச்சுவார்த்தை எனும் பேரீச்சம்பழம்... உள்ளெ பெரிய கொட்டையுடன். அவ்வப்போது கண்துடைப்பாக அரசு போடும் கட்டளைகளுக்கு, வியாபாரிகள் உடனே நீதி மன்றம் செல்வதும், தடைபெறுவதும் கேலிக்கூத்தான செயல்தான்.   நிதிக்கும் நீதிக்குமுள்ள சம்பந்த உறவு அவர்களுக்குத் தெரியாதா என்ன?

அரசியலே சாக்கடையாகக் கிடக்கும்போது, அதில் உல்லாசமாகத் திரியும் இவர்கள் சாக்கடையில் நெளியும் புழுக்களாக (நன்றி பதிவுலகம்) இருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? பணம் பார்த்த பிணங்கள் என்றும் இறங்கி வராது. ஆனால், எத்தனை அரசு அதிகாரிகள், அரசு பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்கள் இதை சவாலாக எடுத்து திறம்பட செயல்பட்டு, தமது பள்ளியின் தரத்தை எமக்கு உறுதிப்படுத்த முடியும்? இதில் முழுவதும் பெற்றோர்களைக் குறை சொல்ல முடியாது. யாரும் முழு விருப்பத்தோடு கல்வி வியாபாரிகளிடம் கல்வி வாங்குவதில்லை. 

ஒவ்வொரு தேர்தலுக்கும் தங்களின் கைகளை இந்த வியாபாரிகளை நோக்கி நீட்டும்போது... அரசியல்வாதிகள் எப்படி இந்த வியாபாரிகளின் கைகளை மடக்க முடியும்? சாட்சிகளைக் கொலை செய்யும் இவர்கள் அனைவருக்கும் எப்படி மனசாட்சி உயிராயிருக்கும்? ஏனோ தெரியவில்லை போராடுபவர்கள் மீது மட்டும் இந்த சட்டம் பல கொம்புகளுடன் முடிந்தவரை ஆழமாகப் பாயும். ஆனால் இந்த வியாபாரிகளின் தோள்களில் காதலி போல் இதமாக சாயும். பெரும்பாலும் அரசு இயந்திரங்கள் ஒழுங்காக இயங்காது. ஆனால், எவரேனும் ஒரு அப்பாவிக் கூட்டம் இந்த இயந்திரத்தின் சக்கரங்களில் சிக்கிக்கொண்டால், மிக கொடூரமாக இயங்கி, சக்கையாக முடிந்தவரைப் பிழிந்துவிடும். எப்படி அடுத்தவன் தயாராவான் என்ற பெரும் சப்தத்தோடு.

கல்வித்தரம் நன்றாக இருப்பதாக நாம் மதிப்பெண்களை வைத்து மட்டும் முடிவு செய்துகொண்டே இருப்போம். எப்படி பெரும்பாலான அந்தப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது? எவர் வேறு பள்ளியில் படித்தாலும், அவரின் மதிப்பெண் அதிகாமாக இருந்தால் அவருக்கே தமது பள்ளியில் படிக்க அனுமதி என்று எழுதப்படாத சட்டம் அமலில் இருப்பதை எங்கு போய் முட்டிக்கொள்வது?

பதினான்கு வயதுவரை இலவசக் கல்வி... நல்ல திட்டம்தான். எந்த அளவுக்கு வெற்றி? இலவசம் தானே, இதில் தரம் எதிர்பார்க்க முடியாது என்பது கல்விக்கும் பொருந்துமா? பாலர் பள்ளிகளுக்கே பல லட்சம் கட்ட தயார்நிலையில் இருக்கும் பெற்றொர்களை அந்த முடிவுக்கு இழுத்துச் சென்ற பயம் / மிரட்டல் எது? ஏட்டுச்சுரைக்காய்களாய் வளர உற்சாகமூட்டுவது நம் நடைமுறைகளா? அல்லது அதுதான் இயல்பா / சாத்தியமா? அரசும், அரசுப்பள்ளி ஆசிரியர்களும் குழந்தைகளின் நற்கல்விக்கு உத்திரவாதம் தந்தால்... நாம் நமது பிள்ளைகளைச் சேர்ப்பதற்கு அப்போதாவது தயாராவோமா? எனும் கேள்விகள் என்னுள்ளும் எழுகிறது. 

பலருக்கும் இந்த கல்வி வியாபாராத்தின் மேல் எரிச்சல் இருந்தாலும், அதை எப்படி எதிர்ப்பது / தவிர்ப்பது / தடுப்பது என்று தெரியாமல் சிலர். தெரிந்தாலும் தலைக்கு மேல் வேலை என சொல்லுவதற்கும் எளிதான காரணம். அல்லது அது தான் நம்மில் பலரின் வாழ்க்கை முறை. என்ன செய்யலாம்? இந்த கல்வி முறையும், வியாபாரமும் ஏழைக்கும் பணக்காரனுக்கும் பெருத்த வித்தியாசத்தை ஏற்படுத்திக்கொண்டே போகிறது. வருத்தம் தான்.

இந்த பதிவும் என்னால் ஆன ஒரு அதிர்வு. பலரும் இந்த அதிர்வுகளை ஏற்படுத்தலாம். இன்னும் விபரம் தெரிந்தவர்கள் தங்களின் பதிவுகள் மூலம் விவரிக்கலாம். மாற்றம் வருமென்ற நம்பிக்கையில் நானும்....

முன்பே அதிர்வு ஏற்படுத்திய அன்பு நெஞ்சங்கள் - மதுரை சரவணன், தருமி இருவருக்கும் நன்றிகள். வாசியுங்கள்.

இந்த பதிவை எழுதத் தூண்டிய தருமி ஐயாவுக்கு நன்றிகள்.




32 comments:

vasu balaji said...

பள்ளிக் கட்டமைப்பும், கல்வி முறையும் மொத்தமாக மாறியாக்வேண்டும். இந்திராகாந்தி அம்மையார் வங்கிகளை அரசுடமையாக்கியதைப் போல், பள்ளி, கல்லூரிகளையும் அரசுடைமை ஆக்க வேண்டும். பெரிய தொழில் நிறுவனங்கள், உயர்மட்ட அதிகாரிகள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள் அனைவரிடமும் கல்விக்கான தொகை வரியாகவும், நாடெங்கும் அல்லது மாநிலமெங்கும் ஒரே கட்டணம் என்பதும் சாத்தியமே. இல்லையேல் மனப்பாடமாக்கி வாந்தியெடுத்து வாங்கும் மதிப்பெண் மட்டுமே மிஞ்சும்.

தமிழ் உதயம் said...

நல்ல கல்வியை அனைவருக்கும் தந்துவிட்டால், எங்கே எல்லோரும் விழித்துக் கொள்வார்கள் என்ற உங்களின் அச்சத்தை வெளிப்படையாக உங்களால் ஒத்துக்கொள்ள முடியுமா?

படிப்பதனால் மட்டும் யாரும் விழித்து கொள்வார்களா என்ன. எல்லா அக்ரமங்களுமே, விழித்திருக்கும் போது தான் நடக்குது.

மதுரை சரவணன் said...

மிக அருமையான பதிவு. வானம்பாடிகள் கூறுவது போல் வாந்தி எடுப்பதாக கல்வி அமையாக்கூடாது என்று தமிழகத்தில் தேர்வு முறையில் மாற்றம் என்ற பதிவு பலரும படிக்காமலே இருக்கிறது. அதையும் பார்த்து கருத்துகள் இடவும். கல்வி முறையில் மாற்றம் அனைவரும் ஒன்றினைந்தால் மட்டுமே சாத்தியம். வாழ்த்துக்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ரொம்பச்சரியா சொல்லியிருக்கீங்க, இந்த மாதிரி சமூக பிரச்சனைகளில் பூனைக்கு யார் மணிகட்டுவது என்று காலம் கடந்துகொண்டிருக்கிறது.

தருமி said...

"உங்கள் ஊரை"ப்பார்த்து கொஞ்சம் பொறாமை தான் .......

தருமி said...

வானம்பாடி,
//பள்ளி, கல்லூரிகளையும் அரசுடைமை ஆக்க வேண்டும். //

இது ஒரு கனவாகிப் போய்விட்டதே.

நடக்கும் பள்ளிகளுக்குப் புதிதாகத் திட்டங்களும் வரையறைகளும் முக்கியம். ஓலைக்கொட்டகைப் பள்ளியில் மாணவர்கள் எரிந்து சாம்பலாகிப் போனதும் ஓரிரு மாதங்களுக்கு பல சட்டங்கள் பேசினார்கள், அதன் பின் அவர்களும் மறந்து போனார்கள் ... நாமும் தான்.

சட்டங்கள் போடணும். அதை நிலை நாட்டணும் -- இந்தியாவைப் பொறுத்தவரை என் ஆசை இது மட்டுமே.

Chitra said...

பலருக்கும் இந்த கல்வி வியாபாராத்தின் மேல் எரிச்சல் இருந்தாலும், அதை எப்படி எதிர்ப்பது / தவிர்ப்பது / தடுப்பது என்று தெரியாமல் சிலர். தெரிந்தாலும் தலைக்கு மேல் வேலை என சொல்லுவதற்கும் எளிதான காரணம். அல்லது அது தான் நம்மில் பலரின் வாழ்க்கை முறை. என்ன செய்யலாம்? இந்த கல்வி முறையும், வியாபாரமும் ஏழைக்கும் பணக்காரனுக்கும் பெருத்த வித்தியாசத்தை ஏற்படுத்திக்கொண்டே போகிறது. வருத்தம் தான்.


...... சரியா சொல்லி இருக்கீங்க...... பகுத்தறிவுக்காக கல்வி என்பது போய், பகட்டுக்காக கல்வி என்று ஆகிவிட்டதே..... :-(

நாடோடி said...

இந்த‌ அதிர்வு ப‌ல‌ரிட‌ம் இருக்கிற‌து ரோஸ்விக்.. க‌ல்வியும் ஆட‌ம்ப‌ர‌ பொருளாய் மாறிக்கொண்டிருக்கிற‌து..

Unknown said...

மாற்றம் நிச்சயம் வரும்... இன்னும் பெரிய கல்வி நிறுவனங்கள் வரும்.. இன்னும் கட்டணம் கூடிப் போகும்..

ஒரு புரட்சி அல்லது நல்ல ஆட்சியாளர்கள் வந்தால் மட்டுமே மாற்றம் அமையும்..

இப்போதைய ஆட்சியாளர்களால் நாம் பின்னோக்கித்தான் செல்கிறோம்..

மாற்றம் ஏற்படுத்தும் உங்கள் முயற்சியில் நானும் இணைந்து கொள்கிறேன்..

ரோஸ்விக் said...

சாத்தியப்பட்ட விஷயங்களை சம்பந்தப்பட்டவர்கள் முன்னெடுப்பார்களா? எடுத்தால் நல்லது.

ரோஸ்விக் said...

நன்றி தமிழ் உதயம். அனைவரும் விழித்துக் கொள்ளாவிட்டாலும்... விழித்துக்கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிடுமே!

ரோஸ்விக் said...

நன்றி மதுரை சரவணன். வந்து படிக்கிறேன் நண்பரே!

ரோஸ்விக் said...

நன்றி பன்னிக்குட்டி ராம்சாமி

ரோஸ்விக் said...

நான் இருக்கும் இதே நாடு போல் நம் நாடும் இருக்கவேண்டும் என்ற ஏக்கம் எனக்கும் உண்டு ஐயா... இது எங்க ஊரு இல்லையே... பொழைக்க வந்தவங்க நாங்க. :-)

நன்றி தருமி ஐயா.

ரோஸ்விக் said...

நன்றி சித்ரா.

ரோஸ்விக் said...

கல்வியும் ஆடம்பரப் பொருளாக மாறியதில் பெரும்பாலானோருக்கு வருத்தங்கள் தான் ஸ்டீபன். நன்றி.

ரோஸ்விக் said...

நன்றி கே.ஆர்.பி.செந்தில்.

நம்ம புரட்சியாளர்களும் நம்ம அரசியல்வாதிகள் மாதிரி தான் இருப்பாங்களோன்னு பயமா இருக்கு.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நல்ல பகிர்வு பிரதர்.

Jey said...

ரோஸ்விக் சார், உங்க பதிவு அருமை. இந்த அதிர்வு கிட்டதட்ட எல்லா சராசரி மனிதனுக்குள்ளும் இருக்கு சார், அதை ஒருங்கினைத்து ஒரே அதிர்வா(laser-coherent wave- மாதிரி) வீரியமுள்ளதா மாத்த ஏதோ ஒன்னு மிஸ்சாகுது சார்.அது நடந்தா சம்மந்த பட்டவங்களோட வால்கள் சரியான அளவுல நறுக்கப்பட்டு, எல்லாம் நல்லவிதமா நடக்கும் சார்.

எவ்வளவோ நடந்துருச்சி, இது ஒரு நாள் நடக்காமையா போயிரும்.
என்ன அப்பப்ப நம்ம BP ஏறும் கொஞ்சம் சூதானமா இருந்துப்போம்.


(பல பதிவர்களுக்கு பின்னூட்டம் போடக்கூட பயமயிருக்கு சார், எத போட்டாலும் டவுசரை கிழிக்க வருவங்க போல )

Jey said...

ரோஸ்விக் said...
//கவிதை எழுதுறவனுக்கு கதைப் பதிவுகள் மொக்கையாக இருக்கலாம். vise versa.

கருத்து சொல்லி பதிவு எழுதினால், எத்தனை பேருக்கு எரிச்சல் வருமென்று உங்களுக்கும் தெரியும்தானே!

சிலருக்கு நகைச்சுவை பதிவுகளைக் கண்டாலே கடுப்பு ஏறும்... ஏன் இந்த பதிவுலகை சமுதாய மாற்றத்திற்கு பயன்படாமல் இப்படி வெட்டியாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்று...

இலக்கியப் பதிவுகள் கேட்கவே வேண்டாம்... அது பெரும்பாலோருக்கு வெறுப்பேற்றும்.

அவரவர் ரசனைகளை யார் மாற்ற முடியும்?? மாற்றவேண்டும்??//

சார் இது இன்னொருத்தருக்கு நீங்க போட்ட பின்னூட்டம். உண்மையாகவே எனக்குள்ளும் இதே கருத்துதன் சார்.
அந்த பதிவுல ஒரே ரத்தகளறியா இருந்ததால உங்க பதிவுல என் பின்னூட்டம்.( நான் கொஞ்சம் புதுசு யார் எப்படினு(பதிவர்களைதான்) தெரியிர வரைக்கும் பந்த மட்டும் எடுத்து போடுறது நல்லது இல்லீங்களா)

ரோஸ்விக் said...

நன்றி ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

ரோஸ்விக் said...

நன்றி ஜெய்.

நல்ல தலைவர்களை நம்மால் கண்டுபிடிக்கமுடியவில்லை.

முன்வரும் தலைவர்களையும் நம்ப முடியவில்லை.

முன்னால் வந்த தலைவர்களும் தாங்கள் நல்லவர்கள் என்று நிரூபிக்கவில்லை / நிரூபிக்கமுடியவில்லை.

ரோஸ்விக் said...

ஒத்த கருத்துக்கு நன்றி. இதுதான் உண்மையெனவும் நான் நம்புகிறேன்.

பதிவுலகப் பிரச்சனையை லூஸ்-ல விடுங்க நண்பா... இவங்க எப்போதுமே இப்படித்தான் பாஸ்.

நீங்க எழுதுங்க. பதிவுலகில் இருக்கும் எந்த தனிமனிதனையும் தாக்காதீர்கள். மாற்றுக்கருத்து இருந்தால் மென்மையாக எடுத்துச் சொல்லுங்கள்.

மீறி ஒருவர் வம்பிழுத்தால், நீங்கள் குனிந்து செல்லத் தேவையில்லை.

முடிஞ்சா கீழே குறிப்பிட்டுள்ள பதிவுகளையும் படிங்க. :-)
http://thisaikaati.blogspot.com/2009/08/blog-post_10.html

http://thisaikaati.blogspot.com/2009/10/blog-post_12.html

Jey said...

//நீங்க எழுதுங்க. பதிவுலகில் இருக்கும் எந்த தனிமனிதனையும் தாக்காதீர்கள். மாற்றுக்கருத்து இருந்தால் மென்மையாக எடுத்துச் சொல்லுங்கள்.//

எழுதி, எழுதி, திருத்திக்கொண்டிருக்கிறேன், விரைவில் பதிவிடுகிறேன்.
உங்களின் ஊக்கத்த்ற்கு நன்றி.

தனிமனித தாக்குதல்களில் எனக்கு உடன்பாடில்லை. உங்களின் கருத்துடன் எனக்கு ஒப்புதல் உண்டு.

//மீறி ஒருவர் வம்பிழுத்தால், நீங்கள் குனிந்து செல்லத் தேவையில்லை.//

ஆம். சில நேரங்களில் நாம் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை மற்றவர்கள் தீர்மானித்து விடுகிறார்கள்.

malarvizhi said...

பதிவு நல்லா இருக்கு.

பனித்துளி சங்கர் said...

சமூக அக்கறை உள்ள சிறந்த பதிவு நண்பரே . பகிர்வுக்கு நன்றி !

Rettaival's Blog said...

ரோஸ்விக்!

நாம் கட்டும் செல்ஃபோன் பில்களிலும் இதர பல கட்டணங்களிலும் "Education cess"என்று ஒரு சமாசாரம் வருகிறதே ...நாம் என்றைக்காவது அது என்ன? அந்த பணம் எங்கே போகிறது என்று யோசித்திருப்போமா...? நம் எல்லாத் தலைவலிகளுக்கும் நாமே தான் காரணமன்றி வேறு யார்?

Rettaival's Blog said...

ரோஸ்விக்!

நாம் கட்டும் செல்ஃபோன் பில்களிலும் இதர பல கட்டணங்களிலும் "Education cess"என்று ஒரு சமாசாரம் வருகிறதே ...நாம் என்றைக்காவது அது என்ன? அந்த பணம் எங்கே போகிறது என்று யோசித்திருப்போமா...? நம் எல்லாத் தலைவலிகளுக்கும் நாமே தான் காரணமன்றி வேறு யார்?

ரோஸ்விக் said...

நன்றி மலர்விழி

நன்றி பனித்துளி சங்கர்

ரோஸ்விக் said...

ரெட்டை - இது பாய்ண்டு... எனக்கும் அந்த பணம் எங்க போகுதுன்னு தெரியாதுயா... :-(
உனக்கு ஏதாவது விபரம் தெரிஞ்சிருந்தா பகிர்ந்துக்க... நிறையப்பேரு தெரிஞ்சுக்கிரலாம்...

இது மாதிரி யாரும் தொடாத பகுதிகளை நீ பதிவிடு ரெட்டை...

ILLUMINATI said...

நெத்தியடி பதிவு ரோசு!

//நம்ம நாட்டுல தான் வாழ்க்கையையும், உடல் நலத்தையும் சீர்குழைக்கும் மதுக்கடையை அரசு ஏற்று நடத்துது. வாழ்க்கைத் தரத்தை உயர்த்த தேவையான கல்வியை மதுக்காய்ச்சியவர்கள்(ளும்) விற்கிறார்கள்.//

அதிலயும்,இது சாட்டை அடி.

இதெல்லாம் விட ஒரு கொடுமை இருக்கு.பிள்ளைகள் ஒன்றாக,ஒற்றுமையாக இருக்கும் இடம் கல்விக்கூடம் என்பது போய்,இப்போது அதுவே ஒரு prestige விஷயம் ஆகி விட்டது.
'நான் ஆங்கிலோ-இந்தியன் ஸ்கூல் ல படிக்கிறேன்.அவன் government ஸ்கூல்'...
என்னவென்று சொல்ல?இதுவா நாளைய தலைமுறைக்கு நாம் கொடுக்கும் பாடம்?

cheena (சீனா) said...

அன்பின் ரோஸ்விக் /r

அருமை அருமை - அண்ணன் தருமியின் தூண்டுதலால் - அதிர்வால் மற்றுமொரு அதிர்வினை ஏற்படுத்தியமை நன்று. மாற வேண்டும் - நிலை மாற வேண்டும் - மாறும். /r

நல்லதொரு சிந்தனை /r

ஆமா கலத் தேடுறவன் எதுக்குத் தேடுறான்னு அவனவனக் கேக்கணும் - கடைச்ல சொல்றது - ஓவரில்ல /r

நல்வாழ்த்துகள் ரோஸ்விக் - நட்புடன் சீனா