Saturday, October 31, 2009

தெரிந்துகொள்வோம் - 3


கி.பி. 400-ம் ஆண்டு வரை சீனாவில் 'இஸ்சா' என்ற பெயரில் தேயிலையை மருந்தாகவே பயன்படுத்தி வந்தனர்.

சீனப் பெருஞ்சுவரைக் கட்டிய 'சீன்-ஹி-கிராம்பி' அச்சுவர் உறுதியுடன் விளங்க பத்து லட்சம் தொழிலாளர்களின் இரத்தத்தால் சுவரை மெழுகச் செய்தானாம்.

மனிதனின் கண்ணுக்குப் புலப்படாத ஒளியைக் கூட தேனியால் பார்க்க முடியும்.

வண்ணத்துப் பூச்சிகள் தன பின்னங்கால்களால் தான் சுவையை அறிகின்றன.

வளிமண்டலம் என்பது பூமியிலிருந்து 9௦௦ கி.மீ. உயரத்திலுள்ள பகுதியாகும்.

பகலைவிட இரவில் கப்பலின் எடை அதிகமாக இருக்கும். நிலவொளியில் ஆகர்ஷண சக்தி அதிகரிப்பதால் ஏற்படும் மாற்றம் இது.

சென்னை மெரீனா கடற்கரையின் நீளம் 13 கி.மீ.

மான்களின் வயதை அவற்றின் கொம்புகளில் உள்ள கிளைகளை வைத்து கணக்கிடுகிறார்கள்.

உலகில் லண்டனில் மட்டும் தான் மனித எலும்புகளின் வங்கியுள்ளது.

தாய்லாந்து 'வெள்ளை யானைகளின் நிலம்' என அழைக்கப்படுகிறது.

ஸ்பெயின் நாட்டிலுள்ள வெளன்சியா சர்ச்சிலுள்ள ஒரு பாத்திரத்தில் தான் இயேசு கடைசியாக உணவருந்தியதாகக் கூறப்படுகிறது.

மருத்துவ ஆய்விற்காக 'ரீசஸ்' என்ற குரங்குதான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.




இந்தியப் பெருங்கடலில் காணப்படும் அதிசய மலர் 'காக்டஸ்'. இது ஐம்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை மலர்கிறது.

அரபி மொழி உலகில் 25 நாடுகளில் அரசு அதிகாரபூர்வ மொழியாக விளங்குகிறது.

பிரெஞ்சு மொழி 32 நாடுகளிலும், ஆங்கிலம் 58 நாடுகளிலும் அரசு அதிகார மொழிகளாய் இருக்கின்றன.



திருமணமாகாத ஸ்பானிஷ் பெண்ணிற்கு பெயர் 'ஸெனோரிட்டா' என்பது.

சர்.சி.வி. ராமன் விஞ்ஞானத்தில் ஆர்வம் மிகுதியால் அதிக வருவாயுள்ள அரசாங்கப் பதவியை விட்டு விலகி குறைந்த வருவாயுள்ள பல்கலைக் கழகப் பேராசிரியராக வேலை ஏற்றுக் கொண்டார்.




பிலிப்பைன்ஸ் நாட்டில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பேசும் எல்லா மொழிகளும் அந்நாட்டு தேசிய மொழிகள்தான்.


உலகில் தாவரங்கள் தோன்றி 43 கோடி ஆண்டுகள் ஆகின்றன.

புதுவருடப் பிறப்பன்று வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்வதால் அதிர்ஷ்டம் வெளியேறிவிடும் என்ற நம்பிக்கை சீனாவில் உள்ளது.




11 comments:

vasu balaji said...

/வளிமண்டலம் என்பது பூமியிலிருந்து ௯௦௦ கி.மீ. உயரத்திலுள்ள பகுதியாகும்./

நல்ல தகவல்கள். எழுத்துரு சரி செய்யுங்கள் ப்ளீஸ்

ஆ.ஞானசேகரன் said...

அருமையான் தகவல்கள்... நன்றிங்க

பிரபாகர் said...

ம்... நல்லா திரட்டியிருக்கீங்க...

புதிய தகவல்களும் இருக்கு.

பிரபாகர்.

Nowfal said...

i collect this useful informations from your blog for my kids.
Thanks

ரோஸ்விக் said...

வானம்பாடிகள் - மாத்திட்டேன் தலைவா. :-) அந்த எண் கோளாறு என் கோளாறு தான். மிக்க நன்றி.
* * *

ஆ.ஞானசேகரன் & பிரபாகர்

மிக்க நன்றி நண்பர்களே. எப்போதாவது பதிவர் சந்திப்பு நடந்தால் கூறவும். உங்களை சந்திக்க வாய்ப்பாக இருக்கும் :-)
* * *

Nowfal- க்கு
மிக மிக நன்றி. உங்கள் குழந்தைகளுக்கும் இது பயன்படுவதில் மிகுந்த மகிழ்ச்சி. உங்களுக்காகவே இனி மாதம் இருமுறை அல்லது வாரம் ஒருமுறை தர முயல்கிறேன். :-)

பின்னோக்கி said...

2வது தகவல் குலைநடுங்க வெச்சுடுச்சு.
நிறைய தெரியாத தகவல்கள்

ஸ்ரீராம். said...

பயனுள்ள சுவாரஸ்யமான தகவல்கள்.

புலவன் புலிகேசி said...

நல்ல தகவல்கள்....தாமதாமாக வந்துப் படித்திருக்கிறேன்.....

ரோஸ்விக் said...

பின்னோக்கி, ஸ்ரீராம் & புலவன் புலிகேசி - மிக்க நன்றி.

புலவா! லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா உங்க பின்னூட்டம் தான் இருக்கு :-)

கார்த்தி said...

Thanks for ur information Frnd :)

ரோஸ்விக் said...

கார்த்தி - மிக்க நன்றி நண்பரே! தொடர்ந்து வருக. விரைவில் இதன் அடுத்த பகுதி வெளியாக உள்ளது.