Monday, October 5, 2009

மௌனங்களை மதிலில் எழுதி . . .



இரவுகளில் இறக்கின்றேன்

இதயமதை இழந்துவிட்டதால்....
விடியும் முன்னே விழிக்கின்றேன்
விடியலாய் நீ என்னில் வந்ததால்...
உறவுகளை துறக்கின்றேன்
உணர்வுகள் உலர்ந்துவிட்டதால்...
வித்தாய் விழுந்த நீ
விழுதாய் என்னில் ஊன்றிவிட்டாய்
விழி இருந்தும் வழி தெரியாமல்
வாய் இருந்தும் வார்த்தை வராமல்
மௌனங்களை மதிலில் எழுதி
மனதினால் மெல்ல வருடி
உன் கனவுகளில் மெல்ல குளித்து
நினைவுகளில் உனை இழந்து
சோகங்களை சுமையாக்கி
இறந்த பின்பும் நான்
இன்னும் வாழ்வதாய்
இந்த உலகம் உரைக்கிறது...
சுகமான நேரங்களில்
சுவாசமான நீ
சோகமான நேரங்களில்
சுமையாகிவிட்டாய்....



9 comments:

க.பாலாசி said...

//சுகமான நேரங்களில்
சுவாசமான நீ
சோகமான நேரங்களில்
சுமையாகிவிட்டாய்....//

அழகான வரிகள்...வாழ்த்துக்கள்...

Raju said...

நல்லாருக்கு பாஸ்..!

ரோஸ்விக் said...

க.பாலாஜி - தங்களின் தொடர் வாசிப்புக்கு நன்றிகள்!

ராஜூ - தங்களின் முதல் வருகைக்கு நன்றி! இப்போ தான் உங்களோட "கவிதை எழுதுவது எப்படி"-ங்கிற பதிவ படிச்சேன். உங்களுக்கு யாரோ நல்ல குரு கிடசிருக்காங்க-னு நினைக்கிறேன். அவங்க எங்க டாஸ்மார்க்-ல வேல செய்யிறாங்களா? :-)
நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்..

ஸ்ரீராம். said...

ரசித்தேன்.

ரோஸ்விக் said...

//ஸ்ரீராம். said...
ரசித்தேன்.//

நண்பா! வருகைக்கு நன்றிகள்...
ரசித்தது கவிதை வரிகளை தானே? ;-)

ஸ்ரீராம். said...

ரசிக்கறா மாதிரி எது இருந்தாலும் ரசிச்சுடறது என் வழக்கம்.

ரோஸ்விக் said...

// ஸ்ரீராம். said...
ரசிக்கறா மாதிரி எது இருந்தாலும் ரசிச்சுடறது என் வழக்கம். //

அட நம்மாளு!

geetha said...

உறவுகளை துறக்கின்றேன்
உணர்வுகள் உலர்ந்துவிட்டதால்

அழகான வரிகள்
வாழ்த்துக்கள்

ரோஸ்விக் said...

// geetha said...

உறவுகளை துறக்கின்றேன்
உணர்வுகள் உலர்ந்துவிட்டதால்

அழகான வரிகள்
வாழ்த்துக்கள்//

வாழ்த்துக்களுக்கும், வருகைக்கும் நன்றி தோழி! தொடர்ந்து வருக! :-)